டான் சீனு, கிராக், வீர சிம்ஹா ரெட்டி போன்ற ஹிட் படங்களை இயக்கியவர் பிரபல தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மாலினேனி.
இயக்குனர் கோபிசந்தும் நடிகர் ரவி தேஜாவும் இணைந்தாலே அந்த படம் ஹிட் தான். அப்படிப்பட்ட கூட்டணி மீண்டும் 4வது முறையாக இணைந்து பணியாற்ற உள்ளார்கள். RT4GM படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
RT4GM படத்தில் கூடுதல் சிறப்பு என்னென்றால் இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இந்த படத்தில் ஓர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகராக செல்வராகவன் அறிமுகமாகும் முதல் தெலுங்கு படமும் இதுதான்.
பீஸ்ட், பகசூரன், மார்க் ஆண்டனி போன்ற படங்களின் மூலம் நடிகராகவும் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த செல்வராகவன் தற்போது தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாக போகிறார்.
நடிகரும் இயக்குனருமான சமுத்திரகனி தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு சினிமா வட்டாரத்தில் சமுத்திரகனி கால்ஷீட்டுக்காக பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதேபோல் RT4GM படத்திற்கு பிறகு செல்வராகவனுக்கும் அதிக வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அமர் பிரசாத் ரெட்டி மேலும் ஒரு வழக்கில் கைது!