தென் மாவட்ட அரசியல் படத்தில் செல்வராகவன்

Published On:

| By Monisha

selvaragavan leading in a south tamilnadu political movie

மொமென்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் ஜி.ஏ.ஹரிகிருஷ்ணன் மற்றும் துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்க புதுமுக இயக்குநர் ரெங்கநாதன் இயக்கும் படம் ஒன்றில் முதன்மை வேடத்தில் நடிக்கிறார் இயக்குநர் செல்வராகவன்.

யோகி பாபு, தெலுங்கு நடிகர் சுனில், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, ராதாரவி மற்றும் வினோதினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இயக்குநர் ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி மேனன் நாயகியாக அறிமுகம் ஆகிறார்.

படத்தை பற்றி பேசிய இயக்குநர் ரெங்கநாதன்… “தென் தமிழ்நாட்டின் அரசியலை பற்றி பேசும் கதை இது. பரபரப்பான களத்தில் ரசிகர்களை கவரும் வகையில் பல்வேறு அம்சங்களை புகுத்தி உள்ளோம். கதையைக் கேட்ட செல்வராகவன், அதை மிகவும் ரசித்ததோடு முதன்மை வேடத்தில் நடிக்கவும் ஒப்புக்கொண்டார்.

படப்பிடிப்பு தொடங்கி திண்டுக்கல், ராமநாதபுரம் மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஐம்பது நாட்களில் படப்பிடிப்பை நிறைவு செய்ய திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம். பிரபல இசையமைப்பாளர் இத்திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார். அவரது பெயர் விரைவில் வெளியிடப்படும்,” என்றார்.

இராமானுஜம்

மணிப்பூர் விவகாரம்: விதி 267-க்கு பதிலாக 176 கொண்டு வரும் பாஜக… எதிர்க்கட்சிகள் அமளி!

வேட்டையனாக ராகவா லாரன்ஸ்: சந்திரமுகி 2 ஃபர்ஸ்ட் லுக்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel