நடிகை சிம்ரன் சமீபத்தில் விஜய்யிடத்தில் சென்று, உங்களை வைத்து படம் தயாரிக்க விரும்புகிறேன் நீங்க எனக்கு டேட் கொடுப்பீங்களா? என்று கேட்டதாகவும், அதற்கு விஜய் “எப்பவுமே என்னுடைய படம் ரிலீஸ் ஆகும்போது ஏகப்பட்ட சிக்கல்கள் வரும். பிரச்சனைகள் எங்கிருந்து வரும் என்றே தெரியாது” என கூறி சிம்ரனை திருப்பி அனுப்பியதாக யூடியூப் ஒன்றில் செய்தி வெளியிட்டுள்ளனர்.
இதை கண்டித்து நடிகை சிம்ரன் கடுமையாக பேசி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “யாரிடமும் நான் போய் டேட் கேட்டது கிடையாது. பெரிய நடிகர்களுடன் நடிக்கவும் ஆசைப்பட்டது கிடையாது. எனக்கு தேடி வந்த வாய்ப்புகளை மட்டுமே பயன்படுத்தியுள்ளேன். இப்போது வரை, நான் அமைதியாக இருந்தேன். எனது இலக்குகள் இப்போது வேறுபட்டவை, ஒரு பெண்ணாக, எனது எல்லைகளை நான் அறிவேன்.
பல ஆண்டுகளாக, எனது பெயர் சமூக ஊடகங்களில் தவறாக பேசப்பட்ட போதும்,இன்னொருவருடன் இணைத்து பேசிய போதும் நான் அமைதியாக இருந்தேன். ஆனால் இப்போது எனக்காக பேச வேண்டியது நிலை ஏற்பட்டுள்ளது. சுயமரியாதை எல்லாவற்றையும் விட முக்கியமானது. “நிறுத்து” என்பது ஒரு சக்திவாய்ந்த வார்த்தை, அதுதான் இப்போது நான் சொல்ல வருவது. எனது உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்.
தொழில்துறையில் உள்ள விவேகமானவர்களிடமிருந்தும் அதே நேர்மையை எதிர்பார்க்கிறேன். பொய்யான வதந்திகளை பரப்புபவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என காட்டமாக கூறியுள்ளார்.
1995 முதல் 2005 வரை காலக்கட்டங்களில் நடிகை சிம்ரன் முன்னணி நடிகையாக இருந்தார். விஜய், சூர்யா, அஜித்குமார் என முன்னணி நடிகர்களுடன் நடித்து பல ஹிட் படங்களை கொடுத்தவர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
மனைவி, குழந்தைகளை தவிக்கவிடுபவர் நல்ல மனிதரா? – யாரை சொல்கிறார் நடிகை குஷ்பூ
வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஷாக்… ரூ.60,000-ஐ நெருங்கிய தங்கம் விலை.!