17 வருட திருமண பந்தம்… விவாகரத்து முடிவை அறிவித்த சீனு ராமசாமி

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சீனு ராமசாமி. தென்மேற்கு பருவகாற்று, நீர்ப்பறவை, தர்மதுரை என மக்களின் வாழ்வியலை யதார்த்த சினிமாவாக திரையில் காட்சிப்படுத்துவார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கோழிப்பண்ணை செல்லத்துரை படம் அனைவரது பாராட்டுக்களையும் பெற்றது.

இந்தநிலையில், இயக்குனர் சீனு ராமசாமி தனது மனைவியுடன் விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு சீனு ராமசாமியின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதுதொடர்பாக சீனு ராமசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,

“அன்பானவர்களுக்கு வணக்கம். நானும் எனது மனைவி G S தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம்.

இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும் அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும் எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன். அவரும் அறிவார்.

இப்பிரிவுக்கு உதவும் படி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளோம். இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கும் அதன் உரிமைக்கு மதிப்பளிக்கும் தங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு ஊக்கம்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமான், ஜி.வி.பிரகாஷ், நடிகர் ஜெயம் ரவி ஆகியோர் விவாகரத்து முடிவை அறிவித்திருந்த நிலையில், இயக்குனர் சீனு ராமசாமியும் விவாகரத்து முடிவுவை அறிவித்திருப்பது சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் 

ஒரு வருடத்தில் 233 கோடி சம்பளம்!

கனமழை… எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts