லவ் டுடே படத்தின் வெற்றிக்கு பிறகு பிரதீப் ரங்கநாதன், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கின்றார் என்ற அதிகாரபூர்வமான தகவல் சமீபத்தில் வெளியானது.
விக்னேஷ் சிவன் சிவகார்த்திகேயனுக்கு சொன்ன கதையில் தான் தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு LIC – Love Insurance Cooperation என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
விக்னேஷ் சிவன் பிரதீப் கூட்டணியில் உருவாக உள்ள இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். LIC படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
சமீபத்தில் LIC படத்தின் பூஜை நிகழ்ச்சி மிகவும் எளிய முறையில் நடைபெற்றது. தற்போது இந்த படத்தில் நயன்தாராவும் சீமானும் நடிக்க உள்ளார்கள் என்று கூறப்படுகிறது. பிரதீப்பின் அக்கா கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார் என்றும், பிரதீப் – நயன் ஆகிய இருவரின் தந்தை கதாபாத்திரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிக்க உள்ளார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இத்தனை ஆண்டு காலமாக சினிமாவிலிருந்து விலகி, அரசியலில் கவனம் செலுத்தி வந்த சீமான் தற்போது மீண்டும் படத்தில் நடிக்க உள்ளார் என்று வெளியான தகவல் சினிமா வட்டாரத்தில் மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நயன்தாராவுக்கு தந்தையாக சீமான் நடிக்க போகிறாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: அதானி பங்குகள் கிடுகிடு உயர்வு!
தங்கம் விலையில் மாற்றம்: இன்றைய நிலவரம்!
இந்த பரிவர்த்தனைகளுக்கு 1.1% கட்டணம்… யுபிஐ புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தன!