விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் LIC படத்தில் சீமான் நடிக்கும் கதாபாத்திரம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் LIC படத்தை இயக்கி வருகிறார். இதில் பிரதீப்பின் ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க, நயன்தாராவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
மேலும் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவுடன் இணைந்து, விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் தயாரித்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இப்படத்தில் இணைந்துள்ளார். முன்னதாக இதுகுறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்த நிலையில், தற்போது சீமானின் கதாபாத்திரம் என்னவென்பது தெரிய வந்துள்ளது.
இப்படத்தில் பிரதீப்பின் தந்தையாக சீமான் நடிக்கிறார். அதோடு ஆர்கானிக் விவசாயத்தை ஆதரிப்பவராக அவரின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டு உள்ளதாம்.
இதில் நடிப்பதற்காகத் தான் சீமான் தாடி வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது கோவை ஈஷா மையத்தில் சீமான் சம்மந்தப்பட்ட காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு வருகின்றன.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
போராட்டத்தில் இறங்கிய ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது!
உலக பணக்காரப் பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்ட எலான் மஸ்க்… இந்தியர்களின் நிலை என்ன?