சமீபத்தில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கையில், கேரள திரையுலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், ஒரு சிலரின் கட்டுப்பாட்டில் தான் மலையாள திரையுலகம் இயங்குகிறது என்றும், வாய்ப்பு வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட்க்கு தயாராக இருக்க நடிகைகளை கட்டாயப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மிகவும் அமைதியாக இயங்கும் மலையாள திரையுலகில் இப்படியெல்லாம் நடக்கிறதா என்றும் பலரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த அறிக்கை வெளியான பிறகு பல நடிகர்களுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
மலையாள நடிகர் சங்கமான அம்மாவின் பொதுச் செயலாளர் நடிகர் சித்திக் மீது நடிகையும் மாடலுமான ரேவதி பாலியல் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, சித்திக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முன்ஜாமீன் கேட்டு கேரள உயர்நீதிமன்றத்தை சித்திக் அணுகினார். ஜாமீன் கிடைக்காததால், உச்சநீதிமன்றத்தை நாடினார்.
உச்சநீதிமன்றத்தில் சித்திக்குக்காக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜர் ஆனார். சம்பவம் நடந்து 8 ஆண்டுகளுக்கு பிறகு, புகார்தாரர் புகார் அளிப்பதால் உள்நோக்கம் இருப்பதாக ரோத்தகி வாதாடினார். இதையடுத்து, சித்திக்கை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டது. மேலும், புகார்தாரர் 8 ஆண்டுகள் கழித்து புகார் அளிப்பது ஏன்? என்பதற்கு விளக்கத்தையும் உச்சநீதிமன்றத்துக்கு தாக்கல் செய்ய கேரள அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கேரள அரசு சித்திக்குக்கு முன் ஜாமீன் தர கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அவருக்கு முன்ஜாமீன் கொடுத்தால், புகார்தாரர் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் வாதிடப்பட்டது. எனினும், பலன் கிடைக்கவில்லை. ஆனால், புகார்தாரர் 8 வருடங்கள் கழித்து புகார் அளித்தாலும் அது வழக்கு விசாரணையை பாதிக்காது என்று கேரள அரசின் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
200 பில்லியன் கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஸக்கர்பர்க்… எல்லாம் உங்க புண்ணியம்தான்!
TN ALERT App : இனி தமிழிலேயே வானிலை அப்டேட் பெறலாம்!