மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல் சம்பங்கள் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு, பல நடிகைகள் தங்களுக்கு நடந்த அநியாயங்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றர்.
விசாரிக்க தனிக்குழு அமைக்கப்பட்டிருந்தாலும், பலன் கிடைக்கவில்லை என்று கூறி நடிகை ஒருவர் 7 நடிகர்கள் மீது தான் கொடுத்த புகாரை வாபஸ் வாங்கியுள்ளார். பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை தடுக்க முடியாத நிலையை இது காட்டுவதாகவும் முதல்வர் முதல் பிரதமர் வரை கடிதம் எழுதியும் எந்த பலனும் இல்லை என்று அந்த நடிகை வேதனைப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், பாலிவுட் நடிகை சயானி குப்தா தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து ரேடியோ நஷாவிடத்தில் பேசியுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது, “நான் ஒரு படத்தில் நடித்து கொண்டிருந்த போது, நடிகர் எனக்கு முத்தம் கொடுப்பது போல காட்சி எடுக்கப்பட்டது.
அப்போது, டைரக்டர் கட் கட் என்று கூறிய பின்னரும் அந்த நடிகர் விடாமல் எனக்கு முத்தம் கொடுத்தார். மிகவும் அநாகரீகமான செயலாக இதை நான் பார்க்கிறேன். இது எனக்கு அசவுகரியத்தை கொடுத்தது. நடிகரின் இந்த நடவடிக்கையை யாரும் கண்டு கொள்ளவில்லை. இது போன்ற சீன்களை எடுக்கும் போது, இயக்குநரை தவிர்த்து மற்றொரு கண்காணிப்பாளரும் இருக்க வேண்டும். அப்போதுதான், நடிகர்களின் எல்லை மீறும் செயலை தடுக்க முடியும். மரியாதைக்குரிய முறையில் காட்சிகளை எடுக்க முடியும்
மற்றொரு முறை Four More Shots Please’என்ற படத்தில் நடிக்க கோவா சென்றிருந்தேன். குட்டை ஷாட்ஸ் போட்டு நடித்து கொண்டிருந்தேன். காட்சி முடிந்ததும் ஒருவர் கூட ஒரு சால்வை எடுத்து எனக்கு தரவில்லை. நடிகைகளை பற்றி என்னதான் நினைத்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. எல்லைகள் எப்போதும் மீறப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
சயானி குப்தா நடித்துள்ள Khwabon Ka Jhamela என்ற படம் கடந்த நவம்பர் 8 ஆம் தேதி ஜியோ சினிமாவில் வெளியானது. இந்த படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் சமூகவலைத் தளத்தில் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.குமரேசன்
செய்திகளைஉடனுக்குடன்பெறமின்னம்பலம்வாட்ஸப்சேனலில்இணையுங்கள்….
“ஃபெஞ்சல் புயலை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார்” – ஸ்டாலின் பேட்டி!
ஃபெஞ்சல் புயல்… வானில் வட்டமடித்த விமானங்கள்!