நடிகர் எம். சசிகுமார் நடிப்பில், இயக்குநர் இரா. சரவணன் எழுதி, இயக்கி, தயாரித்த திரைப்படம் ‘நந்தன்’ கடந்த செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
பட்டியலின மக்களின் தற்கால அரசியல் அதிகார நிலையையும், அவர்களின் துயரமான வாழ்க்கையையும் இந்த படம் நிஜத்திற்கு மிக நெருக்கமாக அழுத்தமாக விவரித்தது.
படத்தில் இடம்பெற்ற வசனங்களும், காட்சிகளும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இத்திரைப்படம் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டது.
தொடர்ந்து இத்திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து படத்தை பார்த்த பிரபலங்களும் பொதுமக்களும் சமூக வலைதளங்களில் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
படத்தை பார்த்த விசிக தலைவர் திருமாவளவன், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் ரஜினிகாந்த் என பலரும் நந்தன் படத்தை வெகுவாக பாராட்டினர்.
இந்த நிலையில் தான் ஓடிடியில் வெளியான 7 நாட்களில் 38 மில்லியன் நிமிட பார்வைகள் பெற்று நந்தன் திரைப்படம் சாதனை படைத்துள்ளது.
மிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்களில் அதிக பார்வைகள் பெற்ற படம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மார்ட்டின், ஆதவ் அர்ஜுனாவுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக ED சோதனை!
டெல்லியில் தாங்க முடியாத அளவுக்கு எகிறும் காற்று மாசு… இன்று முதல் GRAP 3 அமல்!