அமீர் குறித்து விமர்சித்ததற்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்த நிலையில் போலியான வருத்தத்திற்கு உண்மையை பலிகொடுக்க முடியாது என்று இயக்குநரும் நடிகருமான சசிகுமார் தெரிவித்துள்ளார்.
பருத்திவீரன் படம் தொடர்பாக இயக்குநர் அமீர் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விமர்சித்திருந்தார். இதற்கு அமீர் அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து சசிகுமார், சமுத்திரக்கனி, பாரதிராஜா,, பொன்வண்ணன் உள்ளிட்டோர் ஞானவேல் ராஜாவிற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று (நவம்பர் 29) அமீர் குறித்து விமர்சித்துப் பேசியதற்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
#Ameer #Paruthiveeran #Gnanavelraja pic.twitter.com/VuzqC8Cuvq
— M.Sasikumar (@SasikumarDir) November 29, 2023
இந்நிலையில் ஞானவேல் ராஜாவின் அறிக்கை தொடர்பாக சில கேள்விகளை எழுப்பியுள்ளார் இயக்குநரும் நடிகருமான சசிகுமார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது.
அமீர் அண்ணன் ஞானவேல் ராஜா மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்ன?
‘நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் புண்படுத்தி இருந்தால்…’ என்று குறிப்பிட்டுச் சொல்கிறார் ஞானவேல் ராஜா. அப்படியெனில் அந்த சில வார்த்தைகள்’ என்ன?
திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்ன மாதிரியான வருத்தம்?
இதன்மூலம் அமீர் அண்ணனுக்கு ஞானவேல் ராஜா சொல்ல வருவது என்ன?
பெயரிடப்படாத அந்தக் கடிதம் யாருக்கு?” என்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை: மருத்துவமனை அறிக்கை!
சனாதன விவகாரத்தில் உத்தரவு பிறப்பிக்க முடியாது: உச்சநீதிமன்றம்