2020 ஆம் ஆண்டு வெளியான “காவல்துறை உங்கள் நண்பன்” படத்தின் இயக்குனர் ஆர்டிஎம் இயக்கத்தில் நடிகர் சசிகுமாரின் நடிப்பில் தயாராகி உள்ள படம் எவிடன்ஸ்.
5 ஸ்டார் கிரியேஷன்ஸின் சார்பில் கதிரேசன் இந்த படத்தை தயாரித்துள்ளார். நவீன் சந்திரா, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கே.எஸ்.விஷ்ணு ஸ்ரீ இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, ரான் ஈதன் யோகன் இசையமைத்திருக்கிறார்.
First look of #Evidence pic.twitter.com/DkNQLi53ir
— M.Sasikumar (@SasikumarDir) September 30, 2023
தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது.
கடைசியாக சசிகுமார் நடிப்பில் வெளியான அயோத்தி படம் வெற்றி பெற்றிருப்பதால், சசிக்குமாரின் அடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதே போல் இயக்குனர் ஆர்டிஎம் இன் காவல்துறை உங்கள் நண்பன் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்ததால், இந்த எவிடன்ஸ் படமும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்திக் ராஜா
ஆசிய போட்டிகள் 2023: பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்தியா!
இன்னும் ரூ.2000 நோட்டுகளை மாற்றவில்லையா? ஆர்பிஐ முக்கிய அறிவிப்பு!