இயக்குநர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘ சர்தார் – 2 ‘ திரைப்படத்தில் நடிகை ரஜிஷா விஜயன் இணைகிறார் என அப்படக்குழுவால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் ‘ சர்தார் ‘ .’ ஸ்பை திரில்லர் ‘ ஜானரில் வெளியான இந்தத் திரைப்படம், மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க அப்படக்குழு திட்டமிட்டது.
இந்த நிலையில், ‘சர்தார் – 1 ‘ திரைப்படத்தில் நடித்த நடிகை ரஜிஷா விஜயன் இந்த ‘சர்தார் – 2 ‘ படத்தில் நடிக்கிறார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், இந்தப் படத்தில் எஸ். ஜே சூர்யா ,மாளவிகா மோகணன், ஆஷிகா ரங்கநாத் ஆகிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு வேலைகளை மேற்கொள்கிறார். மேலும்,’ சர்தார் – 1 ‘ படத்தில் நடித்த மற்ற நடிகர்களான முனிஷ் காந்த் ,ராசி கண்ணா போன்ற நடிகர்கள் இதில் இணைவார்களா என்பது குறித்த எந்த தகவலும் அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– ஷா
பட்டதாரியை தொழில் முனைவோராக்கும் முதல்வர் மருந்தகம்’ திட்டம் – முழு விவரம்!
பின்வரிசையில் ராகுல்… மத்திய அரசின் இழிவான செயல் : செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு!