சர்தார் திரைப்படம் வெற்றி அடைந்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் கார்த்தி படக்குழுவினருக்கு பரிசு வழங்கியுள்ளார்.
மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்திக் நடிப்பில் “சர்தார்” திரைப்படம் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் நடிகர் கார்த்திக் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.
ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் மற்றும் லைலா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
ஸ்பை த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு உலகளவில் 100 கோடிக்கு மேல் வசூலானது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்திருந்தது.
இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் லக்ஷ்மண்குமார் இயக்குநர் மித்ரனுக்கு டொயோட்டோ ஃபார்ச்சூனர் கார் ஒன்றைப் பரிசாக வழங்கியிருந்தார்.
தற்போது நடிகர் கார்த்திக் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படக்குழுவினருக்கு ரூ. 30,000 மதிப்புள்ள வெள்ளி சில்வர் ஃப்ளாஸ்க்கை பரிசாக கொடுத்துள்ளார்.
சர்தார் படம் தண்ணீரையும் பிளாஸ்டிக் பாட்டில்களை நிராகரிக்க வேண்டும் என்ற கருத்தினை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் என்பதால் நடிகர் கார்த்திக் சில்வர் ஃப்ளாஸ்க்கை கொடுத்துள்ளார்.
சர்தார் படம் ஓடிடியில் நவம்பர் 18 ஆம் தேதி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
ஜவாஹிருல்லா திடீர் இலங்கை பயணம்!
எம்.எல்.ஏ.க்களை அலைக்கழித்த கலெக்டர்!