சரத்குமார் பிறந்தநாள்: ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த ‘தி ஸ்மைல் மேன்’  படக்குழு!

சினிமா

தமிழ் சினிமாவில் வில்லனாக நடிக்க தொடங்கி வெற்றிகரமான கதாநாயகனாக முன்னேற்றம் கண்டவர் நடிகர் சரத்குமார்.

காலமாற்றம், புதிய நடிகர்களின் வருகை நடிகர் சரத்குமாரை கதாநாயகன் என்பதில் இருந்து வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடிக்க வைத்தது.

வாரிசு படத்தில் விஜய்க்கு அப்பாவாக, பொன்னியின் செல்வன் படத்தில் வயது முதிர்ந்தவராக, நடிக்க தொடங்கினார்.

கடந்த மாதம் வெளியான ஹிட் லிஸ்ட் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். சரத்குமார் நடிப்பில் தயாரிக்கப்படும் 150- வது படமாக ‘தி ஸ்மைல் மேன்’  கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.

இந்தப்படத்தை ஷ்யாம் பர்வீன் இயக்கியுள்ளார். சரத்குமார் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

அவரது ஞாபகம் அழிவதற்குள் அவர் ஒரு தொடர் கொலைகள் செய்த குற்றவாளியை பிடிக்க வேண்டும். இதை மையமாக வைத்து படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது.

சரத்குமாருடன் சிஜா ரோஸ், இனியா, ஜார்ஜ் மரியான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சரத்குமார் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று (ஜூலை 14) ‘தி ஸ்மைல் மேன்’  படத்தின்  போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

காலை உணவு திட்டம் விரிவாக்கம்: மாணவர்களுக்கு உணவு பரிமாறிய ஸ்டாலின்

ஆடி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று நடைதிறப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *