தமிழ் சினிமாவில் நகைச்சுவை நாயகனாக வலம் வந்து கொண்டிருந்த நடிகர் சந்தானம் சமீப காலமாக, ஹீரோவாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
கடைசியாக நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்து வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. என்றாலும் வசூலில் குறைவில்லை.
அந்த படத்தை தொடர்ந்து தற்போது இந்தியா பாகிஸ்தான் இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் உருவாகி உள்ள, இங்க நான் தான் கிங்கு என்ற படத்தில் நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ளார்.
இங்க நான் தான் கிங்கு படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் அன்புச் செழியன் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு, டி.இமான் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான மாயோனே பாடலின் வரிகள் வீடியோவும் வெளியானது.
இந்தநிலையில் தற்போது இந்த படத்தின் செகண்ட் சிங்களான குலுக்கு குலுக்கு பாடல் வெளியாகி உள்ளது. திரைக்கதையின்படி திருமண விழாவொன்றில் ஹீரோவும், ஹீரோயினும் செம ஜாலியாக நடனம் ஆடுவது போல இந்த பாடல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
“குலுக்கு குலுக்கு நல்லா குலுக்கு, இப்போ கலக்கு கலக்கு கட்டம் கல கட்டுது எனக்கு” என ரைமிங்காக இந்த பாடலுக்கான வரிகளை எழுதி இருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
டி.இமானின் இசையில் கேட்டவுடன் ஆட்டம் போட வைக்கும் வகையில் இந்தப் பாடலின் இசை செம எனர்ஜிட்டிக்காக உள்ளது.படத்தில் நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை பிரியாலயா நடித்துள்ளார்.
நடிகர்கள் தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, முனீஸ்காந்த், பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வடக்குபட்டி ராமசாமி போல இங்க நான் தான் கிங்கு திரைப்படமும் நிச்சயம் அவருக்கு ஒரு வெற்றியைத் தரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
#25YearsOfPadayappa: ரஜினிக்கு ஜோடியாக நக்மா… வில்லியாக மீனா… ‘படையப்பா’ சுவாரஸ்யங்கள்!
சமூகநீதி வேடம் போடும் திமுக: ராமதாஸ் காட்டம்!
ரமலான் பண்டிகையில் உச்சம் தொட்ட தங்கம்!