குலேபகாவலி, ஜாக்பாட் போன்ற படங்களின் மூலமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் கல்யாண். தற்போது இவரது இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகி உள்ள படம் 80’s பில்டப்.
இந்த படத்தில் சந்தானத்துடன் கே.எஸ்.ரவிக்குமார், மன்சூர் அலிகான், முனிஷ்கந்த், ப்ரீத்தி ராதிகா, மொட்ட ராஜேந்திரன், தங்கதுரை, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரித்து உள்ளார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
80’s பில்டப் படத்தில் நடிகர் சந்தானம் உலகநாயகன் கமல்ஹாசன் ரசிகராக நடித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் glimpse வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது சந்தானத்தின் 80’s பில்டப் படம் வரும் நவம்பர் 24 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதே நாளில் தான் நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் ’துருவ நட்சத்திரம்’ படமும் வெளியாக உள்ளதால் விக்ரமுக்கு போட்டியாக ’பில்டப்’ உடன் களமிறங்குகிறார் சந்தானம்.
டிடி ரிட்டன்ஸ் படத்திற்கு பிறகு நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான “கிக்” திரைப்படம் எதிர்ப்பார்த்த அளவு வெற்றியைப் பெறவில்லை என்பதால் இந்த 80’s பில்டப் படம் சந்தானத்திற்கு கம்பேக் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
பியூட்டி டிப்ஸ்: ஐப்ரோ மேக்கப்… அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்…
கனமழை எதிரொலி: 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
ஹெல்த் டிப்ஸ்: சோற்று கற்றாழையில் இவ்வளவு பயன்கள் உள்ளதா?