Santhanam's 80s Buildup Movie First Look

சந்தானத்தின் புது படம் : 80’s பில்டப்பில் ஃபர்ஸ்ட் லுக்!

சினிமா

டிடி ரிட்டன்ஸ் பட வெற்றியை தொடர்ந்து நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான  “கிக்” திரைப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை  கொடுக்கவில்லை. அந்த படத்திற்கு பிறகு  இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் சந்தானம் ஓர் புதிய படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இன்று (அக்டோபர் 18ஆம் தேதி) சந்தானம் – கல்யாண் கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.

“80’s பில்டப்” என்று டைட்டில் உடன், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக் குழு வெளியிட்டுள்ளது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், மன்சூர் அலிகான், முனிஷ்கந்த், ப்ரீத்தி ராதிகா, மொட்ட ராஜேந்திரன், தங்கதுரை, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் வெளியான குலேபகாவலி, ஜாக்பாட் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் இந்த படம் நிச்சயம் சந்தானத்திற்கு ஒரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

– கார்த்திக் ராஜா

“விஜய் படம் என்றாலே ஏதோ ஒரு பிரச்சினை” : லோகேஷ் கனகராஜ்

மனிதம் மரத்து போய்விட்டதா?: மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஸ்டாலின் கண்டனம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *