நடிகர் சந்தானத்திற்கு கடைசியாக வெளியான 80ஸ் பில்டப் படம் கலவையான விமர்சனங்களை பெற்று எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.
அந்த படத்தை தொடர்ந்து தற்போது சந்தானம் நடிப்பில் வடக்குப்பட்டி ராமசாமி என்ற படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். இவர் சந்தானம் நடித்த டிக்கிலோனா படத்தை இயக்கியவர்.
பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. Trident arts நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது. இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்திருக்கிறார். ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இன்று (ஜனவரி 7) வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக் குழு வெளியிட்டு இருக்கிறது.
கையில் சூலத்துடன் நடிகர் சந்தானம் நிற்க அவரை சுற்றி பணமழை பொழியும் வகையில் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் பிப்ரவரி மாதம் 2-ம் தேதி வெளியாகும் என்றும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த படம் குறித்த மத்த அப்டேட்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
ஜியோ நிறுவனம் ரூ.35,000 கோடி முதலீடு : உறுதி செய்த அம்பானி
TNGIM2024 : செங்கல்பட்டு பெகாட்ரான் தொழிற்சாலை : 8000 பேருக்கு வேலை!