‘மேயாத மான்’, ‘ஆடை’ படங்கள் மூலமும், விக்ரம் பட வசனங்கள் மூலமும் கவனம் ஈர்த்த இயக்குநர் ரத்னகுமார்.
இவர் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான ‘குலுகுலு‘ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
இதனைதொடர்ந்து பல்வேறு படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் சந்தானம் மீண்டும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக சினிமா வட்டாரத்திலும், சமூக வலைதளங்களிலும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் சந்தானத்தின் 15ஆவது திரைப்படத்திற்கு கிக் என பெயரிடப்பட்டதுடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்தினை ஆரஞ்ச், ஜூம் ஆகிய படங்களை இயக்கிய கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் இயக்குகிறார்.
சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் தன்யா ஹோப், ராகினி திவாதி ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா இசையமைக்கிறார்.
க.சீனிவாசன்
சந்தானத்தின் குலுகுலு: படம் எப்படி?