சந்தானத்துக்கு நடுக்கடலில் பேனர்!

சினிமா

ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்குமார், விஜய் ஆகியோர் நடித்த படங்கள் திரையரங்குகளில் வெளியாகும்போது கட் அவுட், பாலாபிஷேகம், மண்சோறு சாப்பிடுதல், கோயில்களில் மொட்டை போடுவது போன்ற ரசிகர்களால் அரங்கேற்றப்படும் மூடத்தனமான செயல்கள் குறைந்து வந்தாலும் கட் அவுட், பேனர் கலாச்சாரம் முடிவுக்கு வராமல் தொடர்கிறது. அப்படி ஒரு சம்பவத்தைச் சந்தானம் ரசிகர்கள் புதுச்சேரியில் நடத்தி இருக்கிறார்கள்.

புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை பின்புறத்தில் பழைய துறைமுகத்தின் இரும்பு தூண்கள் உள்ளன. இதில் அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர்கள், மற்றும் புதுப்படங்கள் வெளியானால் அவரது ரசிகர்கள் ஆபத்தை உணராமல் பேனர்கள் வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், நடிகர் சந்தானம் நடிப்பில் ஜூலை 29ஆம் தேதி வெளியான ’குலு குலு’ திரைப்படத்தை வரவேற்கும் வகையில், புதுச்சேரி சந்தானம் தலைமை ரசிகர் மன்றம் சார்பில் நடுக்கடலில் பேனர் வைத்து பால் அபிஷேகம் செய்து ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர். அவர்கள் வைத்த பேனர் கடல் அலையால் சிறிது நேரத்திலேயே கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டது.

அம்பலவாணன்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0