சங்கமித்ரா படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் தயாரிக்கப்பட போவதாக 2018ல் அறிவிக்கப்பட்ட படம் ‘சங்கமித்ரா.
தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி தயாரிப்பில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதி ஹாசன் முன்னணி கேரக்டர்களில் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள்
மெகா பட்ஜெட்டில் தொடங்க இருந்த இந்தப் படம் பைனான்ஸ் பிரச்சினையால் முடங்கியது, தொடக்க வேலைகள், போட்டோசூட், கலைஞர்களுக்கான முன்பணம் என சுமார் ரூ.10 கோடி வரை முடங்கி இருந்தது.
இந்நிலையில், நான்கு வருடங்களுக்கு பின் இந்தப் படத்தை இப்போது லைகா நிறுவனம் தயாரிக்க முன் வந்துள்ளது.
இந்தப் படத்தில் இருந்து ஏற்கனவே ஒப்பந்தமான ஜெயம் ரவி விலகிவிட்டார். ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குப் பிறகு மீண்டும் ஒரு வரலாற்றுக் கதையில் நடிக்க விரும்பவில்லை என்பதால் விலகியதாகக் கூறப்படுகிறது.
அவருக்குப் பதிலாக விஷால் இணைந்துள்ளார். விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு மாற்றாக நாயகியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகி இருக்கிறார்.
அவருக்குச் சம்பளமாக ரூ.5 கோடி பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
இராமானுஜம்
இந்தியன் 2: வசூல் ஹிட்டடிக்க மாஸ்டர் பிளான்!
பொன்னியின் செல்வன் நடிகையின் முத்தம்: வலைதளங்களில் சத்தம்!