Sandy Master plays the female role

பெண் வேடத்தில் நடிக்கும் சாண்டி மாஸ்டர்

சினிமா

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஓர் நடன இயக்குனராக வலம் வருபவர் சாண்டி மாஸ்டர். நடன இயக்குனராக மட்டுமில்லாமல் சமீப காலமாக தொடர்ந்து பல படங்களில் நடிகராகவும் அசத்தி வருகிறார். நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தில் சாண்டி ஒரு கொடூர வில்லனாக நடித்து அனைத்து தரப்பு மக்களின் பாராட்டுக்களையும் பெற்றார்.

இந்நிலையில் சாண்டி நடித்துள்ள புது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

கன்னட இயக்குனர் ஷூன்யா இயக்கத்தில் ‘ரோசி’ என பெயரிடப்பட்டுள்ள படத்தில் ஆண்டாள் என்ற கதாபாத்திரத்தில் சாண்டி நடிக்கின்றார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சாண்டி பெண் வேடத்தில் இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

இந்த படம் தமிழ் மற்றும் கன்னடம் என இரு மொழியில் உருவாகிறது. மேலும் இந்த படத்தில் நடிகர் யோகேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு குருகிரண் இசையமைக்கிறார். DY புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ராஜேஷ் மற்றும் வினோத் இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.

ரோசி படத்தின் கன்னட மொழி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். அதேபோல் தமிழ் மொழி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். தற்போது ரோசி படத்தில் சாண்டியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

வேலைவாய்ப்பு: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பணி!

பனிப்பொழிவு: கேதார்நாத் கோயில் நடை அடைப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *