சாய்பல்லவி எப்போதும் அந்த ஆடைக்கு நோதான் : புகழ்ந்த இயக்குநர் சந்தீப் ரெட்டி

Published On:

| By Kavi

sandeep vanga speak about sai pallavi

எத்தனை பட வாய்ப்புகள் வந்தாலும் கிளாமராக நடிக்கமாட்டேன் என்பதில் சாய் பல்லவி உறுதியாக இருப்பதாக இயக்குநர் சந்தீப் ரெட்டி புகழ்ந்து பேசியுள்ளார். sandeep vanga speak about sai pallavi

சாய் பல்லவி – நாக சைதன்யா நடிப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான லவ் ஸ்டோரி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ‘தண்டேல்’ என்ற படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகிறது.

சந்து மொண்டட்டி இயக்கியுள்ள இந்த படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் அல்லு அரவிந்த் மற்றும் பன்னி தாஸ் தயாரித்துள்ளனர். தமிழில் இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படம் எடுக்கப்பட்டதாக படக்குழு கூறுகிறது.

sandeep vanga speak about sai pallavi

கடந்த 30ஆம் தேதி தண்டேல் படக்குழு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தது.

20 பேரிடம் உரிமை sandeep vanga speak about sai pallavi

அப்போது தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கூறுகையில், “இந்த படத்தின் கதைக்காக 20 பேரிடம் உரிமை வாங்கியதாகவும், அந்த 20 பேரும் பாகிஸ்தானுக்கு சென்று அங்குள்ள சிறையில் கைதியாக இருந்து அதன் பிறகு விடுதலையானவர்கள். அவர்களின் கதை இது” என்று கூறியிருந்தார்.

தொடர்ந்து படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் நேற்று (பிப்ரவரி 2) தெலங்கானாவில் நடைபெற்றது.

இதில் அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள சந்தீப் ரெட்டி வங்கா கலந்துகொண்டு சாய்பல்லவி குறித்து பேசினார்.

அப்போது அவர், “அர்ஜுன் ரெட்டி படத்தில் சாய் பல்லவியை நடிக்க வைக்க ஆசைப்பட்டேன். அப்போது சாய் பல்லவி கோ ஆர்டினேட்டர் என்று கேரளாவைச் சேர்ந்த ஒருவரிடம் பேசினேன். ஒரு காதல் கதையில் சாய் பல்லவியை நடிக்க வைக்க விரும்புகிறேன் என்று சொன்னேன். அதற்கு அவர், அந்த ரொமாண்ட்டிக் கதை எப்படி இருக்கும் என்று கேட்டார். நான் வழக்கமான தெலுங்கு படத்தை விட வித்தியாசமானதாக இருக்கும் என்று சொன்னேன். அந்த படத்தில் சாய் பல்லவி நடிப்பார் என்பதை மறந்துவிடுங்கள். ஏனென்றால் அவர் ஸ்லீவ்லெஸ் கூட அணியமாட்டார் என்று கூறினார்.
காலபோக்கில் வாய்ப்புகளின் அடிப்படையில் ஹீரோயின்கள் மாறிவிடுவார்கள். ஆனால் பிரேமம் முதல் 10 ஆண்டுகளாக சாய் பல்லவி மாறாமல் அப்படியே இருக்கிறார்” என்று குறிப்பிட்டார்.

அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. sandeep vanga speak about sai pallavi

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share