sanam shetty phishing call

சனம் ஷெட்டிக்கு வந்த ஃபோன் கால்….என்ன நடந்தது?

சினிமா

நடிகை சனம் ஷெட்டி தொலைபேசி மூலமாகப் பணம் பறிக்கும் ஒரு கும்பலிடம் தனக்கு வந்த அழைப்பைப் பற்றி எக்ஸ் தளத்தில் நேற்று மாலை ஒரு காணொலி வெளியிட்டுள்ளார்.

நடிகை சனம் ஷெட்டி மஹா, ஊமை செந்நாய், கதம் கதம் போன்ற தமிழ்ப் படங்களிலும், ஒரு சில மலையாளம், தெலுங்கு, மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். 2020-ஆம் ஆண்டு நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

இவருக்குச் சமீபத்தில் பணம் பறிக்கும் ஒரு கும்பலிடம் இருந்து தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது. அதைப் பற்றி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் நேற்று மாலை ஒரு காணொலி பதிவேற்றியுள்ளார்.

அதில் “ நான் இன்று ஒரு ஆன்லைன் ஃபிஷிங்க் காலுக்கு விக்டிம் ஆகிட்டேன். நானே பலருக்கு உங்களின் விபரங்களைக் கேட்டு தொலைப்பேசி அழைப்பு வந்தால், கொடுக்காதீர்கள் என்று சொல்லியிருக்கிறேன். ஆனால் எனக்கே அப்படிப்பட்ட அழைப்பு ஒன்று வந்தது.

அழைப்பின் மறுமுனையில் பேசிய பெயர் குறிப்பிடாத நபர், உங்களின் தொலைபேசி எண், இன்னும் இரண்டு மணி நேரத்தில் செயலிழக்கப் போகிறது, அதன் மீது 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

நான் பதற்றத்துடன் ஏன்? என்று கேட்டேன். அதற்கு அந்த நபர், நீங்கள் சமீபத்தில் மும்பையில் ஒரு சிம் கார்டு வாங்கியுள்ளீர்கள். அந்த எண்ணில் இருந்து பலரை அழைத்து தொல்லை கொடுத்துள்ளீர்கள் என கூறினார்.

அதற்கு பின் என்னிடம், வேறு ஒரு நபர் பேசினார். விஜய் சோப்பையா என்று அறிமுகம் படுத்திக்கொண்ட நபர், உங்கள் மீது மும்பையில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது என்றார்.

அதற்கு நான் மும்பை பக்கம் வந்தே பல வருஷங்கள் ஆகிறது, எனக்கு இந்த ஒரு நம்பர் தான் இருக்கிறது என்றேன். உடனே, சரி உங்கள் சார்பாகப் புகார் அளிக்க வேண்டும் என்றால் உங்களின் விபரங்கள் எனக்கு வேண்டும் என்றார்.

அப்போது தான் என் மூளைக்குள் ஒரு பொறி தட்டியது, தொலைத்தொடர்பு துறையிடமே எனது ஆதார் மற்றும் மற்ற தகவல்கள் இருக்குமே, பின்பு எதற்கு என்னிடம் தனியாகத் தகவல்கள் கேட்கிறார்கள்? என்று கேட்டு அழைப்பைத் துண்டித்து விட்டேன்.

எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணுக்கு இது போலவே ஒரு சம்பவம் நடந்துள்ளது. அவர் செய்த ஒரு தவறு, அவரது தொலைப்பேசிக்கு வந்த லிங்க்கை க்ளிக் செய்துள்ளார். திறந்தவுடன் அவரது வங்கிக் கணக்கின் மொத்த விபரமும் திருடப்பட்டுள்ளது.

அதனால் மக்களே இந்த மாதிரி அழைப்புகள் வந்தால் எடுக்க வேண்டாம். ஜாக்கிரதையாக இருங்கள்” என்று கூறியுள்ளார்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

மலையாள நடிகைகளின் பாலியல் குற்றச்சாட்டுகள் : “No என்றால் No தான்”…குஷ்பு பதிவு!

ரேகா நாயர் கார் ஏறி ஒருவர் பலி: நடிகை விளக்கம்!

ஓய்வு பெற்ற பெண் இன்ஸ்பெக்டர் கொலை… மதிமுக மாவட்ட செயலாளர் கைது!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *