சமந்தாவின் ‘யசோதா’ : ரிலீஸ் எப்போது?

சினிமா

சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘யசோதா’ படத்தின் ரிலீஸ் தேதி இன்று (அக்டோபர் 17 ) வெளியிடப்பட்டுள்ளது.

பிரபல நடிகையாக வலம் வரும் சமந்தாவின் அடுத்த படமான ‘யசோதா’ தமிழ், கன்னடம், மலையாளம் , தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நவம்பர் 11 ஆம் தேதி வெளியாகிறது.

ஸ்ரீதேவி மூவிஸ் புரொடக்‌ஷனின் 14 வது படமாக, சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்க ஹரி மற்றும் ஹரிஷ் இந்தப் படத்தை இயக்கி உள்ளனர்.

இந்த படம் குறித்து தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் பேசுகையில், ’யசோதா’ இப்போதுள்ள காலத்திற்கு ஏற்ற ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாக இருக்கும்.

புதிர் மற்றும் உணர்ச்சிமயமான கதையமைப்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கொண்டு பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில், இந்தப் படம் குறித்து ஒரு வார்த்தையில் கூற வேண்டும் என்றால் இருக்கை நுனியில் அமரும்படியான கதையமைப்பைக் கொண்டது.

இந்தக் கதைக்காகவும் ஆக்‌ஷன் காட்சிகளுக்காகவும் சமந்தா அவரது இரத்தமும் வியர்வையும் கொடுத்து உழைத்திருக்கிறார்.

பின்னணி இசையில் இதுவரை நீங்கள் கேட்டிராத மணிஷர்மாவின் இசையை கேட்டு மகிழ்வீர்கள்.

தற்போது இந்தப் படத்தின் தெலுங்கு வெர்ஷன் சென்சார் செய்யப்பட்டுள்ளது.

மற்ற மொழிகளுக்கான சென்சார் விரைவில் முடிவடைந்து விடும். இந்தப் படத்தின் தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு செலவுகளில் எந்தவொரு காரணத்திற்காகவும் நாங்கள் சமரசம் செய்யவில்லை.

மிகப்பெரிய பொருட்செலவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பை 100 நாட்களில் முடித்துள்ளோம்.

இந்தக் காலத்திற்கு ஏற்றவாறு வரக்கூடிய த்ரில்லர் படங்களை விரும்புபவர்களுக்கு இந்த ‘யசோதா’ நிச்சயம் பிடிக்கும். நவம்பர் 11 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது” என்று கூறினார்.

இந்த படத்தில் சமந்தாவுடன் வரலக்‌ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், ஷத்ரு, மாதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபடா, பிரியங்கா ஷர்மா மற்றும் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அண்மையில் இந்தப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அதில் நடிகை சமந்தா கர்ப்பிணி பெண்ணாக தோற்றமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

“அதிமுகவில் ஓ.பி.எஸ் ஒரு கரும்புள்ளி” : சி.வி.சண்முகம்

பிளிப்கார்ட் பிக் தீபாவளி: ஆஃபர்களை தவறவிட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *