யசோதா வெளியாவதற்கு முன்பே சந்தோஷப்பட்ட சமந்தா!

சினிமா

ஹரி மற்றும் ஹரீஸ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள யசோதா திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பல கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் நடிகை சமந்தா பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில், அவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் யசோதா.

த்ரில்லர் கதையம்சம் கொண்ட யசோதா படத்தில் சமந்தா வாடகைத் தாயாக நடித்துள்ளார். இந்தப் படம் நாளை (நவம்பர் 11) உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஹரி மற்றும் ஹரீஷ் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள இந்த படத்தில் சமந்தா உடன் இணைந்து நடிகை வரலட்சுமி சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மணிசர்மா இசையமைத்துள்ளார். வாடகைத் தாய் முறையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு உள்ளதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில், யசோதா திரைப்படம் வெளியாவதற்கு முன்பே வசூலை வாரிக்குவித்து உள்ளது.

அதன்படி இப்படத்தின் டிஜிட்டல் உரிமை 24 கோடிக்கும், சாட்டிலைட் உரிமை 13 கோடிக்கும், இந்தி டப்பிங் உரிமை 3.5 கோடிக்கும், வெளிநாட்டு உரிமை 2.5 கோடிக்கும், திரையரங்க உரிமை 11 கோடிக்கும் விற்பனையாகி உள்ளது. இதன் மூலம் 50 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால், அதிக சந்தோஷத்தில் உள்ளார், சமந்தா.

மு.வா.ஜெகதீஸ் குமார்

“வீக் ஆகிட்டேன்”கண்ணீர் விட்ட சமந்தா

“எச்சில் துப்பி, அடித்து அசிங்கப்படுத்தினார்” – நடிகை பார்வதி நாயர் மீது பரபரப்பு புகார்!

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *