சமந்தாவின் ‘சாகுந்தலம்’ ரிலீஸ் தேதி வெளியீடு!

சினிமா

இயக்குநர் குணசேகரன் இயக்கத்தில் சமந்தா நடித்திருக்கும் ’சாகுந்தலம்’ படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு இன்று (செப்டம்பர் 23) வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ள நடிகை சமந்தா ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ’சாகுந்தலம்’, ’யசோதா’, ’குஷி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

samantha's shaakuntalam movie release date is out now

அதில், மகாகவி காளிதாஸ் எழுதிய புராணக்கதையான சாகுந்தலத்தை தழுவி எடுக்கப்படும் ’சாகுந்தலம்’ படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. மேலும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் குணசேகரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் சமந்தா, சகுந்தலா என்ற கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். சமந்தாவிற்கு ஜோடியாக நடிகர் தேவ் மோகன் நடித்துள்ளார்.

இவர்களுடன் அதிதி பாலன், பிரகாஷ் ராஜ், கௌதமி, மோகன் பாபு, மதுபாலா, கபீர் சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு மணி ஷர்மா இசையமைத்துள்ளார்.

சாகுந்தலத்தின் ரிலீஸ் தேதி

samantha's shaakuntalam movie release date is out now

’சாகுந்தலம்’ படத்தின் ஃபஸ்ர்ட் லுக் போஸ்டர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. அதில் காட்டிற்குள் மான்களுக்கு இடையில் அமர்ந்திருக்கும் சமந்தாவின் வித்தியாசமான தோற்றமே, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு படத்தின் கதை குறித்த ஆர்வத்தையும் அதிகரித்திருந்தது.

இந்த நிலையில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ’சாகுந்தலம்’ படம், நவம்பர் 4 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது எனப் படக்குழு அறிவித்துள்ளது. இதனால், சமந்தா அதிக உற்சாகத்தில் உள்ளார்.

மோனிஷா

’நித்தம் ஒரு வானம்’ டீசரில் என்ன ஸ்பெஷல்!

இந்த வார தியேட்டர் மற்றும் ஓடிடி ரிலீஸ் படங்கள் என்னென்ன?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *