சமந்தா நடிப்பில் உருவான ‘ யசோதா’ திரைப்படத்தின் டிரைலர் இன்று (அக்டோபர் 27 ) வெளியாகியுள்ளது.
ஹாரி-ஹரீஸ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள திரைப்படம் யசோதா.இந்த திரைப்படத்தில் நடிகை சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார், சம்பத் ராஜ், மதுரிமா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
யசோதா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் தமிழ் டிரைலரை நடிகர் சூர்யா இன்று வெளியிட்டுள்ளார். வாடகைத் தாயாக இருக்கும் சமந்தா எதிர்கொள்ளும் சவால்களை மையப்படுத்தி, சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. இக்கதையில் கடுமையான மருத்துவக் குற்றங்களை தைரியத்துடன் சமந்தா வெளிப்படுத்தும் வகையிலான காட்சிகளும் வசனங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
படத்தின் டிரைலரை தெலுங்கில் நடிகர் விஜய் தேவரெகொண்டா, கன்னட மொழியில் ரக்ஷித் ஷெட்டி, மலையாளத்தில் துல்கர் சல்மான், இந்தி மொழியில் வருண் தவான் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
சமந்தாவின் யசோதா திரைப்படம் நவம்பர் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கணக்கு வழக்கு: கலவர பூமியாகும் தெலுங்கு திரையுலகம்!
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அது ஏன் நிறுத்தப்பட்டது? அண்ணாமலை கேள்வி!