தமிழ்,தெலுங்கு என தென்னிந்திய சினிமாவின் முன்னணி நாயகியாக வலம் வரும் சமந்தா ‘யசோதா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ஹரி ஹரிஷ் இயக்கும் இந்த படத்தை தேவி மூவிஸ் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்கிறார்.
த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளராக நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பல முன்னணி திரைத்துறையினரும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
தெலுங்கில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளில் டப் செய்யப்பட்டு ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் பட வெளியீடு தள்ளிப்போனது.
இந்த நிலையில் ‘யசோதா’ படம் தொடர்பாக புதிய அறிவிப்பொன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, செப்டம்பர் 9-ஆம் தேதி மாலை 5:49 மணிக்கு ‘யசோதா’ படத்தின் டீசர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- க.சீனிவாசன்