Samantha Ruth Prabhu Vijay Deverakonda set the stage on fire

“சமந்தா முகத்தில் சிரிப்பை காண வேண்டும்”- விஜய் தேவரகொண்டா

சினிமா

விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘குஷி’ திரைப்படத்தின் இசை நிகழ்ச்சி ஹைதராபாத்தில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெற்றது.

இந்த இசை நிகழ்ச்சியில் பாடகர்கள் ஜாவேத் அலி, சித் ஸ்ரீராம், மஞ்சுஷா, சின்மயி மற்றும் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் ஆகியோர் ‘குஷி’ படத்தில் இடம்பெற்ற பாடல்களை பாடி அனைவரையும் கவர்ந்தனர்.

முன்னதாக இந்த படத்தின் இசை வெளியீட்டில் கவர்ச்சி உடையில் வலம் வந்த சமந்தா விழா மேடையில் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து ’குஷி’ படத்தின் டைட்டில் பாடலுக்கு விஐய் தேவரகொண்டாவும், சமந்தாவும் ரசிகர்கள் முன்னிலையில் கைகோர்த்து ஒன்றாக நடித்து, சமந்தாவை நடனத்தின்போது விஜய் தேவரகொண்டா அலேக்காக தூக்கி சுற்றிய போது மைதானம் அதிர்ந்தது.

இந்த விழாவில் படத்தின் நாயகி சமந்தா பேசுகையில், ”படப்பிடிப்பு தருணத்திலேயே இப்படத்தின் பாடல்களைக் கேட்டு ‘குஷி’ ஆல்பம் மீது காதல் கொண்டேன். பாடல்களை இங்கே நேரலையில் கேட்கும்போது செப்டம்பர் 1 ஆம் தேதி உங்கள் அனைவரோடும் சேர்ந்து படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. நீங்கள் அனைவரும் விரும்பும் ஒரு திரைப்படத்தை எப்போதும் உங்களுக்கு வழங்க விரும்புகிறோம்.

அப்படி ஒரு முயற்சியை இந்த படத்தின் மூலம் செய்துள்ளோம். என் திரையுலக பயணத்தில் மறக்க முடியாத படம் ‘குஷி’ . திரைப்படத்தில் மூத்த கலைஞர்கள் பலர் உள்ளனர். அவர்களின் பங்களிப்பு திரைப்படத்தை வலிமையாக்கி இருக்கிறது. நீங்கள் என் மீது காட்டும் அன்பினால் நான் ஆரோக்கியத்துடன் மீண்டு வருவேன். ‘குஷி’ பிளாக்பஸ்டர் ஹிட் என்பது உறுதி என்றார்.

Samantha Ruth Prabhu Vijay Deverakonda set the stage on fire

நாயகன் விஜய் தேவரகொண்டா பேசுகையில்,”இங்கு குஷி இசை நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் எனது நன்றி. செப்டம்பர் ஒன்றாம் தேதி அன்று உங்களுக்கு ‘குஷி’யாக இருக்க வாழ்த்துக்கள். நீங்கள் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் நீங்கள் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என எந்த மொழியில் பேசினாலும்.. உங்களுக்கு மகிழ்ச்சியை பரப்ப நாங்கள் வருவோம்.

உங்களுக்காக ஒரு படத்தை கொடுத்து எவ்வளவு நாளாகிவிட்டது என்று நினைவில்லை.
உங்கள் அனைவருக்கும் இது ஒரு சூப்பர் ஹிட்டாக இருந்தாலும், கடந்த ஒரு மாதமாக இந்த படத்தின் பணிகள் குறித்து இயக்குநர் சிவாவிடம் தொடர்ந்து பேசி வருகிறேன்.

Samantha Ruth Prabhu Vijay Deverakonda set the stage on fire

ஒவ்வொரு முறையும் அவர் ”செப்டம்பர் ஒன்றாம் தேதி அன்று உங்கள் முகத்தில் ஒரு புன்னகையை நான் பார்க்க வேண்டும் விஜய் தேவரகொண்டா சகோதரரே” என்றார் அதை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு வேலை செய்கிறார். சிவாவுக்கு என் மீது அவ்வளவு அன்பு இருக்கிறது. எவ்வளவு அன்பு இருக்கிறது என்பதை அவர் என்னிடம் சொல்ல விரும்பவில்லை.

ஆனால் இந்தப் படத்தின் வெற்றியை என் முகத்தில் பார்க்காமல்.. சமந்தாவின் முகத்தில் பார்க்க ஆசைப்படுகிறேன்.
இந்தப் படத்திற்காக அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதை சொல்ல முடியாது. ஏப்ரல் மாதம் படத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் தொடங்கினோம்.

முக்கிய பகுதியில் படப்பிடிப்பு நிறைவடைந்தது. ஜூலையில் 30 முதல் 35 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்த போது, ‘தனக்கு உடல்நிலை சரியில்லை’ என்று சமந்தா கூறினார். ‘நீ மிகவும் அழகாக இருக்கிறாய்’ என நானும், சிவாவும் சமந்தாவிடம் கூறுவது வழக்கம். முதலில் மூன்று நாள் நீடிக்கும் என நினைத்தேன். பிறகு இரண்டு வாரங்களாகும் என்று நினைத்தோம். ஆனால் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. மற்றொரு திரைப்படத்தின் விளம்பர நிகழ்வில் நான் கலந்து கொண்டிருந்த போதுதான் அவரது உடல்நிலை குறித்து அறிந்தேன்.

Samantha Ruth Prabhu Vijay Deverakonda set the stage on fire

ஏனென்றால் கலைஞர்களாகிய நாம் பார்வையாளர்களை சிரிக்க வைக்க வேண்டும். எங்கள் துயரங்களை சொல்ல விரும்பவில்லை. சமந்தா சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால்… எங்களுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். அவர் மிகவும் போராடினார். ஆனால் ஒரு சந்தர்ப்பத்தில் சமந்தா தனது உடல்நிலை குறித்து பேச முன்வந்தார். ஏனெனில் கொரோனா தொற்று பாதிப்பிற்குப் பிறகு பலர் இதே போன்ற உடல்நல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். நானும் உங்களை போலவே போராடுகிறேன் என்று அவர்களுக்கு தைரியம் அளிக்கும் வகையில் தனது உடல்நிலை குறித்து வெளிப்படுத்தினார் சமந்தா.

இன்று நாம் விளம்பர நிகழ்வுகளை முன்னெடுக்கும் போது பலர் வந்து, ‘சமந்தா தான் எங்களுக்கு இன்ஸ்பிரேஷன்’ என்று கூறுகிறார்கள்.

அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்கிறார்கள். அவருக்கு இன்னும் உடல்நிலை சரியில்லை. ஆனால் அவர் இன்று எங்களுக்காக இங்கு வந்து என்னுடன் நடனமாடினார். செப்டம்பர் ஒன்றாம் தேதி சமந்தா முகத்தில் சிரிப்பை காண வேண்டும். மேலும் எங்கள் இயக்குநர் சிவாவிற்கு ஒரு ஹிட் கொடுக்க விரும்புகிறோம். சிவா இந்த திரைக்கதையை ‘டியர் காம்ரேட் ‘ படப்பிடிப்பின் போது சொன்ன போது எனக்கு மிகவும் பிடித்திருந்தது” என்றார்.

இராமானுஜம்

ஆசிய கோப்பை: கே.எல்.ராகுலை தேர்வு செய்யாத ரவி சாஸ்திரி

முரசொலி மாறன் பிறந்தநாள் : முதல்வர், அமைச்சர்கள் மரியாதை!

+1
2
+1
1
+1
0
+1
2
+1
1
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *