நாடு திரும்பும் சமந்தா

சினிமா

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தெலுங்கு உட்பட பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவுடன் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

நடிகை சமந்தா தமிழில் விஜய், சூர்யா உள்ளிட்ட முக்கிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

அதிலும் கடந்த ஆண்டு ‘புஷ்பா’ படத்தில் ஆடிய ஒற்றை பாடலுக்கு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்துவிட்டார்.

அதிக வெளிச்சத்தில் நடித்தால் வரக்கூடிய பாலிமார்பஸ் லைட் எரப்ஷன் என்ற தோல் நோயால் நடிகை சமந்தா அவதிப்பட்டதால் அதற்கான சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா சென்றிருந்தார்.

இந்நிலையில், தற்போது அமெரிக்காவில் நடிகை சமந்தா மேற்கொண்ட சிகிச்சை நிறைவு பெற்றதால் ஓரிரு நாளில் அவர் நாடு திரும்புவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக , சமந்தா பாலிமார்பஸ் லைட் எரப்ஷன் என்ற இந்த நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள வெளிநாடு சென்றதால் மணிரத்னத்தின் கடல் மற்றும் சங்கரின் ஐ திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை அப்போது இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

சசி தரூர் சென்னை வருகை: ஆள் திரட்டும் கார்த்தி சிதம்பரம்

கர்மா ஒரு காரணமா? தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்ற பெஞ்ச்!

+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *