நிஜ வாழ்க்கையில் இதை செய்யாததுதான் என் தவறு- நடிகை சமந்தா உருக்கம்!

Published On:

| By Kumaresan M

சினிமாவில் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் சாதிப்பவர்கள் பலர். அதில் நடிகை சமந்தாவும் ஒருவர்.  மாடலிங் துறையில் நுழைந்து ரூ. 500 முதல் சம்பளம் வாங்கியவர்,  அப்படியே ஹீரோயினாக  நடிக்க தொடங்கி இப்போது அசுர வளர்ச்சி கண்டுள்ளார்.தமிழ், தெலுங்கு என கலக்கியவர் பாலிவுட் பக்கமும் சென்றுள்ளார்.

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து பிரிந்தார்.  இதையடுத்து,  நாகசைதன்யா சோபிதா துலிபாலாவை மணக்கவுள்ளார். இவர்களின் திருமணம் டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது.

இதற்கிடையே, நடிகை சமந்தாவும் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜை  அவர் காதலித்து வருவதாகவும், விரைவில் இவர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இயக்குநர் ராஜ்தான் ஹானி பனி தொடரை இயக்கியவர்.

நடிகை சமந்தா பாலிவுட் நடிகர் வருண் தவான் இணைந்து நடித்துள்ள இந்த வெப் தொடர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில், விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த வெப் தொடரின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் சமந்தா பங்கேற்றார்.

அப்போது, இந்த சீரிஸில் நீங்கள் ஸ்பை ஏஜெண்டாக நடித்துள்ளீர்களே… நிஜ வாழ்க்கையில் கூட ஸ்பையாக செயல்பட்டீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த சமந்தா,  நிஜ வாழ்க்கையில்  அப்படி செய்யாமல் இருந்தது மிகவும் தவறு . ஸ்பை ஆகாததால் தான் என் வாழ்க்கை இப்படி மாறி போனது என்று உருக்கமாக கூறியுள்ளார்.

சமந்தா இப்படி கூறியதும் நெட்டிசன்கள் தனது தனிப்பட்ட வாழ்க்கையை சமந்தா மீடியாக்களில் பகிர்வது தவறானது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

வழிநெடுக ஆயிரக்கணக்கான தொண்டர்கள்… வேட்பு மனு தாக்கல் செய்தார் பிரியங்கா காந்தி

ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார்: எடப்பாடி பழனிசாமி தாக்கு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel