கரண் ஜோகர் வழங்கி வரும் காபி வித் கரண் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது பகுதியில் இந்தி நடிகர் அக்க்ஷய் குமார் , சமந்தா இருவரும் கலந்து கொண்டார்கள்.
அப்போது சமந்தா பேசும்போது நடிகை நயன்தாரா பற்றி குறிப்பிட்டார். இதற்கு கரண் ஜோகர் நயன்தாராவின் பெயர் என்னுடைய லிஸ்டில் இல்லையே, சமந்தா என்று தானே உள்ளது என்றார்.
இப்படி அவர் சொன்னது சமூக வலைதளங்களில் நயன்தாரா ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது
இந்த நிலையில் நயன்தாரா பற்றிய சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் ஆர்மேக்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து தனக்கு கிடைத்த பட்டியலில் தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகை என்பதில் சமந்தாவின் பெயர் தான் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதை வைத்துதான் நான் அப்படி கூறினேன். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து அல்ல என்று ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார் கரண் ஜோகர் அவர் தரப்பில் நயன்தாரா சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டாலும் நயன்தாரா ரசிகர்கள் கண்டனங்கள் ஆர் மேக்ஸ் நிறுவனத்தை நோக்கி திரும்பியிருக்கிறது.
இராமானுஜம்