சமந்தாவின் ‘சாகுந்தலம்’ எப்போது ரிலீஸ்?

Published On:

| By Kavi

samantha movie sagundhala update

நடிகை சமந்தாவின் கடந்த வருட திரையுலக வாழ்க்கை ஏற்றம், தடுமாற்றம், சிரமங்கள் நிறைந்ததாகவே இருந்தது.

அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா நடித்த புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடன மாடினார். அதன்மூலம் அகில இந்திய சினிமாவில் பிரபலமானார்.


தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியான இத்திரைப்படம் வசூலை வாரிக்குவித்தது.

இப்படத்தில் சமந்தா ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனாவையே பின்னுக்கு தள்ளிவிட்டார்.


விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய்சேதுபதி,நயன்தாராவுடன் இணைந்து நடித்திருந்தார்.

இதிலும், நயன்தாராவை விட சமந்தாவின் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது.

இதையடுத்து,சமந்தா யசோதா படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்து வருகிறார்.


யசோதா படத்தின் விளம்பரத்துக்காக பேட்டி அளித்த சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு தற்போது அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும், பல கஷ்டங்களை கடந்து இன்னும் நான் உயிரோடு இருக்கிறேன் என உருக்கத்துடன் பேசி சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.


திரையரங்கில் வெளியான யசோதா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், நடிகை சமந்தா நடித்துள்ள காவியக் காதல் திரைப்படமான சாகுந்தலம் திரைப்படத்தின் புதிய வெளியீட்டு தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

அனுஷ்கா நடித்த ருத்ரமா தேவி படத்தை இயக்கிய இயக்குனர் குணசேகரன் இப்படத்தை இயக்கி உள்ளார். சகுந்தலை என்ற முதன்மை கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம்,மலையாளம் என 5 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக 3டியில் இப்படம் உருவாகியுள்ளது

இப்படம் நவம்பர் மாதமே வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் சில காரணங்களால் படம் வெளியாகவில்லை. இதையடுத்து, சாகுந்தலம் படம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இராமானுஜம்

உதயநிதிக்கு எதிரான தேர்தல் வழக்கு : அதிரடி உத்தரவு!

ஜாம்பவான் மரணத்திலும் செல்ஃபி : வசைபாடும் நெட்டிசன்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel