சமீபத்தில் உலக பிக்கில் பால் லீக் போட்டியை கண்டு ரசித்தார் சமந்தா. samantha love with raj?
அவருடன் தி ஃபேமிலி மேன், சிடாடல் -ஹனி பன்னி வெப்தொடர்கள் இயக்குநர் ராஜ் நிடமொருவும் இருந்தார். போட்டியின் போது, இருவரும் சந்தோஷமாக நடந்து வரும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து தன் சந்தோஷத்தை சமந்தா வெளி காட்டியிருந்தார்.
இதையடுத்து, சமந்தா ராஜ்ஜூடன் காதலில் இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த ராஜ் நிடமொருடா ஏற்கனவே திருமணமானவர்.
இதையடுத்து, நெட்டிசன்கள் சமந்தாவை வறுத்தெடுத்து வருகின்றனர். ‘அடுத்த பெண்ணின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம் சமந்தா. அந்த பெண்ணை கண்ணீர் விட வைத்து நீங்கள் சந்தோஷமாக இருக்க முடியாது. திருமணமாகாத யாரையாவது காதலித்து திருமணம் செய்து கொள்ளவும். உங்களை மீண்டும் மணக்கோலத்தில் பார்க்க ஆவலாக உள்ளோம். ஆனால், அடுத்த பெண்ணின் கணவருடன் அல்ல’ என்று காட்டமாக விமர்சித்துள்ளனர்.
மற்றொருவர், ராஜ் திருமணமாகி குடும்பத்துடன் வாழ்கிறார். அவருடன் எடுத்த புகைப்படங்களை பொதுவெளியில் பகிர வேண்டாம். ஏற்கனவே, ஒரு திருமண பந்தத்தை நீங்கள் உடைத்து விட்டீர்கள். இப்போது, மற்றொரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடுகிறீர்கள்’ என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, ராஜ் திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்கிறார். விரைவில் இருவரும் விவாகரத்து பெறப் போகின்றனர் என்கிற தகவலும் உண்டு. முன்னதாக. நடிகர் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017ம் ஆண்டு மணந்தார் சமந்தா. 4 ஆண்டு கால வாழ்க்கைக்கு பிறகு அவரை பிரிந்தார். தற்போது, நாகசைதன்யா சோபிதாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
சமீபத்தில் தனது நடிப்புக்கு தீனி போடும் வகையில் சவால் நிறைந்த கதாபாத்திரங்களை ராஜ் கொடுப்பதாக சமந்தா புகழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது. samantha love with raj?