இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் உயிர்ப்புடன் இயங்கிவந்த நடிகை சமந்தா எந்த ஒரு பதிவையும் வெளியிடாமல் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக மெளனமாக இருக்கிறார்.
சில வாரங்களுக்கு முன்பு அவரது முன்னாள் கணவரான நாக சைதன்யா மற்றும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்துள்ள நடிகை ஷோபிதா துலிபல்லா இருவருக்கும் இடையில் காதல் என செய்தி கசிந்தது.
இதில் சமந்தாவின் பெயரையும் குறிப்பிட்டு ஊடகங்களில் கிசுகிசுக்கள் வெளியானது. இவற்றுக்கெல்லாம் பதில் சொல்வதை காட்டிலும் மெளனமாக கடந்துவிடலாம் என்பதால் சமந்தா சமூக வலைத்தளங்களை விட்டு விலகியிருக்கலாம் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.
தற்போது இந்தி திரையுலகின் இயக்குனர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் சமந்தா கலந்து கொள்ளும் நிகழ்ச்சி பற்றி செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்நிகழ்ச்சியில் சமந்தா தன்னுடைய திருமண வாழ்க்கை பற்றி சில சம்பவங்களை மனம் விட்டு பேசியுள்ளார் என கூறப்படுகிறது. விரைவில் ஓடிடியில் வர உள்ள அந்த நிகழ்ச்சிக்காகக் கூட அவர் சமூக வலைதள பதிவுகளில் இருந்து தற்காலிகமாகவிலகியிருக்கலாம் என்கிறார்கள்.
அம்பலவாணன்