இதுவும் கடந்து போகும் : சமந்தா நெகிழ்ச்சி பதிவு!

சினிமா

நடிகை சமந்தா தற்போது பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘யசோதா’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இயக்குனர்கள் ஹரி சங்கர் – ஹரிஷ் நாராயண் இயக்கத்தில் சமந்தாவுடன் இணைந்து, வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா சர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வரும் நவம்பர் 11 ஆம் தேதி திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாக உள்ள நிலையில் கையில் ட்ரிப்ஸ் ஏற்றிக் கொண்டே யசோதா படத்திற்கு சமந்தா டப்பிங் பேசியுள்ள புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வமான சமூக வலைதளப்பக்கத்தில் இன்று (அக்டோபர் 29 ) பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘யசோதா ட்ரெய்லருக்கு ரசிகர்களாகிய நீங்கள் அளித்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது.

உங்கள் அனைவருடனும் நான் பகிர்ந்து கொள்ளும் இந்த அன்புதான், வாழ்க்கை எனக்கு அளிக்கும் சவால்களைச் சமாளிக்க வலிமை அளிக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு எனக்கு Myositis எனப்படும் ஆட்டோ இம்யூன் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டது.

முழுமையாக குணம் அடைந்த பின்னர் இந்த விஷயத்தை உங்களிடம் சொல்லலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த பிரச்னை குணம் அடைவதற்கு கூடுதல் காலம் எடுக்கும்.

இந்த பாதிப்பை ஏற்றுக் கொண்டு அதனுடன் நான் போராடிக் கொண்டிருக்கிறேன். நான் விரைவில் பூரண குணமடைவேன் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் எனக்கு நல்ல நாட்களும் கெட்ட நாட்களும் உண்டு.’ “இதுவும் கடந்து போகும்” என்று கூறியுள்ளார்.

சமந்தா விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

கோவை சரளா நடிப்பை புகழ்ந்து தள்ளிய பிரபலங்கள்!

கோவை பந்த் : அண்ணாமலை சொல்வது என்ன?

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *