தியானத்தில் ஆழ்ந்த சமந்தா: வைரல் போட்டோ!

Published On:

| By Jegadeesh

கோவை ஈஷா யோகா மையத்தில் தியானம் செய்த போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து, ’தியானமே என் வலிமை’ என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைதள பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துவரும் சமந்தா அண்மையில் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

இதையடுத்து புதிய படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தற்போதைக்கு புதிய படங்களில் நடிப்பதில்லை என்றும் ஓராண்டு காலம் தற்காலிக ஓய்வு எடுக்க உள்ளதாகவும்  கூறியிருந்தார் நடிகை சமந்தா.

இந்நிலையில், இறை பக்தியில் அதிகம் நாட்டம் கொண்ட நடிகை சமந்தா கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு சென்று தியானம் மேற்கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களைத்தான் அவர் தனது சமூகவலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், தியானமே என் வலிமை என்று குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளை நிற சல்வாரில், கழுத்தில் சிவப்பு அரளி பூ மாலை அணிந்தபடி… ஈஷா யோகா மையத்தில் பல பெண்களுக்கு நடுவே சமந்தாவும், அமைதியாக அமர்ந்து தியானம் செய்யும் புகைப்படங்கள் தான் தற்போது சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் வெட்டிக்கொலை!

அதிகரிக்கும் வெப்ப அலை: எச்சரிக்கும் ஐ.நா – காரணம் என்ன?

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share