நடிகை சமந்தா தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் ஒன்றாக வாழ்ந்த ஹைதராபாத் வீட்டை விலைக்கு வாங்கியுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நாக சைதன்யாவை தென்ன்னிந்தியாவின் முன்னணி நடிகையான சமந்தா கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதனை தொடர்ந்து ஹைதராபாத்தில் வீட்டை விலைக்கு வாங்கி சுமார் 4 ஆண்டுகள் வரை ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த இவர்கள் பிரிவிற்கு பின் அந்த வீட்டை விற்றுவிட்டு அவரவர் வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை சமந்தா தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் ஒன்றாக வாழ்ந்த ஹைதராபாத் வீட்டை விலைக்கு வாங்கியுள்ளதாக பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான முரளி மோகன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.
அதில், அந்த வீட்டை வாங்கியவரிடம் இருந்து அதிக விலை கொடுத்து சமந்தா மீண்டும் வாங்கியுள்ளதாகவும், அந்த வீட்டில் தற்போது தனது அம்மாவுடன் சமந்தா வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
- க.சீனிவாசன்