ராமராஜனின் ”சாமானியன்” திரைப்பட வழக்கு: நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி தீர்ப்பு!

சினிமா

நடிகர் ராமராஜன் நடிப்பில் உருவாகியுள்ள சாமானியன் படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதி மன்றம் இன்று (பிப்ரவரி 23 ) உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ராமராஜன் , ராதா ரவி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் எக்ஸ்ட்ரா எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சாமானியன் என்கிற பெயரில் படம் எடுத்துள்ளது. இந்த படத்தை ராகேஷ் இயக்க ,இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை பார்த்துவிட்டு ’ஆர்ட் அடிக்ட்’ என்கிற நிறுவனத்தின் உரிமையாளரான வியன் ஆர்மான் என்பவர், சாமானியன் என்கிற பெயரில் படத்தை வெளியிடுவதைத் தடுக்க கோரி வழக்கு தொடர்ந்தார்.

கடந்த 2012 ஆம் ஆண்டில் படத்தின் தலைப்பை பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து வருவதாகவும், அதே பெயரில் படத்தை வெளியிடுவது காப்புரிமையை மீறிய செயல் என்பதால் ’சாமனியன்’ என்கிற தலைப்பில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.

இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு இன்று (பிப்ரவரி 23 ) விசாரணைக்கு வந்த போது எட்கேட்ரா நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி,

தாங்களும் அந்தப்படத்தின் தலைப்பை பதிவு செய்துள்ளோம், அது ஏப்ரல் மாதம் வரை செல்லுபடியாகும் என்பதால் இந்த தலைப்பை பயன்படுத்தியதில் தவறில்லை என்று வாதிட்டார்.

படத்திற்கு 5 கோடி ரூபாயும் , விளம்பரத்திற்காக ஒரு கோடி ரூபாயும் செலவழிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்தார்.

மேலும், படத்தலைப்பிற்கு காப்புரிமை கேட்க முடியாது என்பதால், வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அவர் வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

அதிமுக பொதுக்குழு தீர்ப்பு : ஓபிஎஸ் பதில் என்ன?

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.