தியேட்டருக்குள் வெடி… சல்மான் ரசிகர்கள் அலப்பறை!

சினிமா டிரெண்டிங்

’ஏக் தா டைகர்’, டைகர் ஜிந்தா ஹேய்’, “வார்”,  “பதான்”  ஆகிய படங்களை தொடர்ந்து யஷ் ராஜ் ஃபில்ம்ஸ் நிறுவனத்தின் SPY UNIVERSE படங்களின் வரிசையில் அடுத்த படமாக சல்மான் கானின் “டைகர் 3” படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று (நவம்பர் 12) வெளியாகி உள்ளது.

இந்த படத்தை மனிஷ் ஷர்மா இயக்கியுள்ளார். நடிகர்கள் கத்ரீனா கைஃப், இம்ரான் ஹஷ்மி உள்ளிட்ட பலர் டைகர் 3 படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான டைகர் 3 திரைப்படத்திற்கு தொடர்ந்து கலவையான விமர்சனங்கள் மட்டுமே கிடைத்து வருகிறது. ஆனாலும் சல்மான் கான் ரசிகர்கள் டைகர் 3 திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

மேலும் டைகர் 3 திரைப்படத்தில் நடிகர் ஷாருக்கானின் கேமியோ காட்சி இடம் பெற்றுள்ளதால் இந்த தீபாவளி ஹிந்தி சினிமா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீடாக அமைந்துள்ளது.

இந்த கொண்டாட்டத்தின் உச்சகட்டமாக நேற்று டைகர் 3 படம் திரையிடப்பட்ட திரையரங்குக்குள் ரசிகர்கள் வெடி வெடித்து அலப்பறை செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மலேகான் நகரில் உள்ள ஒரு தியேட்டரில் டைகர்-3 படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் தியேட்டருக்குள்ளேயே சரவெடி மற்றும் வானவேடிக்கை பட்டாசுகளை வெடித்து படம் பார்க்க வந்த அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தனர்.

தியேட்டருக்குள் பட்டாசு வெடிக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரசிகர்களின் இந்த செயலுக்கு பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திக் ராஜா

தீபாவளி பண்டிகை: புதிய உச்சம் தொட்ட டாஸ்மாக் மது விற்பனை!

சென்னையில் அதிக காற்று மாசுபாடு… நாளை விடுமுறையா?

+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *