லோகேஷ் கனகராஜின் LCU படங்களுக்காக கோலிவுட் ரசிகர்கள் எந்த அளவிற்கு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்களோ.. அதேபோல யஷ் ராஜ் ஃபிலிம்ஸின் SPY UNIVERSE படங்களுக்கு பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில் தீபாவளிக்கு வெளியாக உள்ள SPY UNIVERSE- இன் அடுத்த படமான சல்மான் கானின் “டைகர் 3” படத்தின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது.
இந்த ப்ரோமோ வீடியோவிற்கு “Tiger Ka Message” எனப் பெயரிடப்பட்டுள்ளது. Tiger 3 படத்தை மனிஷ் ஷர்மா இயக்கியுள்ளார்.
டைகர் உயிரோடு இருக்கும் வரை, அவனை யாராலும் வெல்ல முடியாது! #TigerinSeithi #Tiger3 தீபாவளி முதல்.
Tiger uyiroda irukum varai, avanai yaaralum vella mudiyaadhu. #TigerinSeithi #Tiger3 Deepavali mudhal… #YRF50 | #YRFSpyUniverse pic.twitter.com/W9PofFtvHh— Yash Raj Films (@yrf) September 27, 2023
2012 ஆம் ஆண்டு சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடிப்பில் வெளியான “Ek Tha Tiger” திரைப்படம் தான் YRF SPY UNIVERSE- இன் முதல் படம்.
அதன்பிறகு 2017 ஆம் ஆண்டு இரண்டாம் பாகமாக வெளியான “Tiger Zinda Hai” திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவுடன் SPY UNIVERSE திட்டத்தை தொடர முடிவு செய்து ரித்திக் ரோஷனின் “வார்”, ஷாருக்கானின் “பதான்” திரைப்படங்களை SPY UNIVERSE TAG- இல் வெளியிட்டனர்.
அந்தப் படங்களும் மெகா ஹிட் ஆக, பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் SPY UNIVERSE-இன் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது.
ஷாருக்கானின் “பதான்” படத்தில் “டைகர்” கதாபாத்திரத்தில் ஒரு சின்ன கேமியோ கொடுத்திருப்பார் சல்மான் கான். அதேபோல் “டைகர் 3” படத்தில் “பதான்” கதாபாத்திரத்தில் ஷாருக்கான் கேமியோ கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்திக் ராஜா
கனடாவுடன் மோதல்: அமெரிக்க வெளியுறவுத்துறை செயலருடன் ஜெய்சங்கர் சந்திப்பு!
ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்!