கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் சலார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மற்றும் இரண்டு ட்ரெய்லர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இரண்டு நெருங்கிய நண்பர்கள் பரம விரோதிகளாக மாறுகின்றனர் என்பதே சலார் படத்தின் ஒன் லைன் கதை.
இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், பிரித்திவிராஜ் சுகுமாரன், ஜெகபதி பாபு, மது குருசாமி, ஈஸ்வரி ராவ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டிசம்பர் 22ஆம் தேதி (நாளை) கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சலார் வெளியாக உள்ள நிலையில் இன்று ( டிசம்பர் 21) சலார் படத்தின் செகண்ட் சிங்கிள் ஆன “பல கதையில்” என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹீரோவின் கதாபாத்திரம் குறித்து விவரிப்பது போன்று பாடல் வரிகள் எழுதப்பட்டுள்ளது.
தற்போது இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
அயோத்தி பட இயக்குனருடன் இணையும் ராகவா லாரன்ஸ்?
”இன்னும் 11 அமைச்சர்களுக்கு தீர்ப்பு”: அண்ணாமலை சூசகம்!