கே ஜி எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் சலார். நடிகர் பிரபாஸுடன் ஸ்ருதிஹாசன், ப்ரித்விராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் Glimpse வீடியோ மற்றும் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சலார் படத்தின் கேரள திரையரங்கு ரிலீஸ் உரிமையை ப்ரித்விராஜ் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், தமிழ்நாடு திரையரங்கு ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் கைப்பற்றியுள்ளது.
சலார் படத்தின் புரோமோஷனுக்காக எக்ஸ் தளத்தில் சலார் எமோஜிகள் வெளியிடப்பட்டது. பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸுக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த பெரிய வெற்றியும் கிடைக்கவில்லை என்பதால் சலார் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது.
சலார் படம் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் பிறகு டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி இரவு 7.19 மணிக்கு ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சலார் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை சலார் படத்தின் போஸ்டர்கள் மட்டுமே வெளியாகிக் கொண்டிருந்ததால், சலார் ட்ரெய்லர் குறித்த இந்த அப்டேட் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி
INDvsNED: கடைசி போட்டி… புதிய சாதனை படைக்க காத்திருக்கும் மூன்று இந்திய வீரர்கள்!