salaar box office collection
கே.ஜி.எஃப் – 1, கே.ஜி.எஃப் – 2 என 2 மிகப்பெரிய வெற்றிப் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ், பிரித்விராஜ், ஸ்ருதி ஹாசன், மீனாட்சி சவுத்திரி, ஈஸ்வரி ராவ், ஸ்ரீயா ரெட்டி, ஜெகபதி பாபு என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தயாரான திரைப்படம் ‘சலார்: பார்ட் 1 – சீஸ்ஃபயர்’.
இந்த படத்திற்கும் கே.ஜி.எஃப்-க்கும் தொடர்பு உள்ளதா? தமிழில் லோகேஷ் கனகராஜ் ஒரு சினிமேட்டிக் யுனிவர்ஸை உருவாக்கியதுபோல, பிரசாந்த் நீலும் ஒரு சினிமேட்டிக் யுனிவர்ஸை உருவாக்க உள்ளாரா என பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்,
இந்த திரைப்படம் கடந்த டிசம்பர் 22 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.
இந்த திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.178.7 கோடி வசூலை பெற்று, ஜவான், லியோ, பதான் என அனைத்து படங்களின் சாதனையையும் முறியடித்து,
இந்தியாவில் 2023ல் மிகப்பெரிய முதல் நாள் துவக்கம் பெற்ற திரைப்படம் என்ற சாதனையை பெற்றது.
2வது நாள் முடிவில் இப்படம் ரூ.295.7 கோடி வசூலை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் முதல் 3 நாட்கள் வசூல் எவ்வளவு என்ற விவரத்தை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி, முதல் 3 நாட்களிலேயே, ரூ.402 கோடி வசூலை பெற்று, ‘சலார்: பார்ட் 1 – சீஸ்ஃபயர்’ திரைப்படம் அசத்தியுள்ளது.
𝑩𝑶𝑿 𝑶𝑭𝑭𝑰𝑪𝑬 𝑲𝑨 𝑺𝑨𝑳𝑨𝑨𝑹 🔥#BlockbusterSalaar hits 𝟒𝟎𝟐 𝐂𝐑𝐎𝐑𝐄𝐒 𝐆𝐁𝐎𝐂 (worldwide) 𝐢𝐧 𝟑 𝐃𝐚𝐲𝐬!#RecordBreakingSalaar #SalaarRulingBoxOffice#Salaar #SalaarCeaseFire #Prabhas #PrashanthNeel @PrithviOfficial @shrutihaasan @VKiragandur @hombalefilms… pic.twitter.com/C8rFGeSs86
— Salaar (@SalaarTheSaga) December 25, 2023
ஆனால், படக்குழு வெளியிட்டுள்ள எண்களின்படி, விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று, இப்படம் ரூ.106.3 கோடி வசூலை மட்டுமே பெற்றுள்ளது.
முதல் 2 நாட்களை விட ஞாயிறு அன்று இப்படம் அதிக வசூலை பெரும் என எதிர்பார்த்த நிலையில், முதல் 2 நாட்களை ஒப்பிடுகையில் மிகக் குறைவான வசூலையே இப்படம் பெற்றுள்ளது.
முன்னதாக, திரை விமர்சகர்களிடம் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், அதன் காரணமாக, ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தை போல ‘சலார்’ திரைப்படத்தின் வசூலும் அடுத்தடுத்த நாட்களில் சரிகிறதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முரளி
டிஜிட்டல் திண்ணை: பொதுக்குழு தீர்மானம்- எடப்பாடிக்கு உதவிய பன்னீர்
salaar box office collection