பிரம்மாண்ட பட்ஜெட்டில் திரைப்படமாக வருகிறது ’சக்திமான்’

Published On:

| By Monisha

தொடராக வெளிவந்து ரசிகர்களை கவர்ந்த சக்திமான் தொடர் 200 – 300 கோடி ரூபாய் பட்ஜெட் செலவில் திரைப்படமாக உருவாக உள்ளது என்று நடிகர் முகேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.

கடந்த 1997 முதல் 2005 ஆம் ஆண்டு வரை தூர்தர்ஷன் சேனலில் 90-ஸ் கிட்ஸ்களின் விருப்பமான தொடராக சக்திமான் தொடர் இருந்து வந்தது. இது முழு திரைப்படமாக உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சக்திமான் படம் குறித்து அடுத்தகட்ட தகவல்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில் சக்திமான் தொடரில் நடித்த நடிகர் முகேஷ் கண்ணா பேட்டி ஒன்றில் சக்திமான் படம் குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், “சக்திமான் தொடரைப் படமாக உருவாக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த படத்தை 200-300 கோடி பட்ஜெட் செலவில் ஸ்பைடர் மேன் படத்தை உருவாக்கிய சோனி பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது.

கொரோனாவின் போது படம் அறிவிக்கப்பட்டதால் தாமதம் ஏற்பட்டது. ஆனால் இது ஒரு மாபெரும் பொழுதுபோக்காக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன். நான் சமீபத்தில் சிலரிடம், இந்த படம் சிறிய படம் கிடையாது. பெரிய படம் என்பதால் தாமதம் ஏற்படலாம் என்று தெரிவித்திருந்தேன்.

இதில் மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், நான் சக்திமான் கதாபாத்திரத்தில் நடிப்பேனா என்பதுதான். ஆனால் நான் சக்திமான் படத்தில் எந்த வேடத்திலும் நடிக்கப்போவது இல்லை. விரைவில் படக்குழு மற்றும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்று உறுதியளித்துள்ளார்.

இந்த படத்தில் சக்திமான் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ரன்வீர் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

மோனிஷா

ஒடிசா ரயில் விபத்து: பல உயிர்களை காப்பாற்றிய தமிழக வீரருக்கு முதல்வர் வாழ்த்து!

”அமைச்சர் செஞ்சி மஸ்தான் பதவி விலக வேண்டும்”: எடப்பாடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share