தொழிலதிபரின் பாலியல் தொல்லை… சிறையில் 48 நாள்கள் கிடந்த நடிகை… காலத்தின் கொடுமை!

Published On:

| By Kumaresan M

நடிகை காதம்பரி ஜெத்வானி தமிழில் நடித்த ‘செந்தட்டி காளை செவத்த காளை’ என்ற படம் இன்னும் வெளியாகவில்லை. அகமதாபாத்தை பூர்வீகமாக கொண்ட இவர், மும்பையில் வசிக்கிறார்.

சமீபத்தில்  காதம்பரி அளித்த பேட்டியில், “2023-ம் ஆண்டு மும்பை பாந்திரா குர்லா போலீஸ் நிலையத்தில் சஜ்ஜன் ஜின்டால் என்ற தொழிலதிபர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்தேன். முதலில் வழக்குப்பதியவில்லை. பின்னர், மும்பை  உயர்நீதிமன்றத்தின் தலையீட்டின் பெயரில் கடந்த டிசம்பர் மாதத்தில் ஜிண்டால் மீது வழக்கு பதியப்பட்டது.

ஜிண்டால் ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு வேண்டியவர். அதனால், அவர் தன்னை பாதுகாத்துக்கொள்ள,  ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான, குக்கல வித்யாசாகர் வழியாக , எங்களுக்கு எதிராக ஆந்திராவில் வழக்குப்பதிவு செய்யக் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, என்  மீது விஜயவாடா காவல்நிலையத்தில் போலியாக மோசடி புகார் கொடுத்தார்.

இதையடுத்து,  கடந்த  பிப்ரவரி மாதம் ஆந்திர துணை கமிஷனர் விஷால் கன்னி தலைமையிலான போலீசார் மும்பைக்கு வந்து, என்னையும் என் குடும்பத்தினரையும் விஜயவாடாவுக்கு  கொண்டு சென்றனர்.அங்கு,  காவலில் வைத்து 3 நாள்கள் சித்ரவதை செய்தனர். ஐ.பி.எஸ் அதிகாரியே என்னை உடல் ரீதியிலும், மன ரீதியிலும் துன்புறுத்தினார். என் பெயரில் இருந்த ரூ.6 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறித்துக் கொண்டனர் என்று தெரிவித்திருந்தார்.

மேலும், அங்கு சிறையில் அடைக்கப்பட்டு 48 நாள்களுக்கு பிறகு நாங்கள் வெளியே வந்தோம். ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இப்போதைய  ஆந்திர முதலமைச்சராக உள்ள சந்திரபாபு நாயுடு எங்களை   காப்பாற்ற வேண்டும் என கூறியிருந்தார்.

இது தொடர்பாக ஆந்திர மாநில அரசிடம் ஆன்லைனில் புகாரும் அனுப்பியுள்ளார். இதையடுத்து, விஜயவாடா போலீஸ் கமிஷனர் காதம்பரி விவாகாரத்தை விரிவாக விசாரித்து அறிக்கை அளிக்க துணை போலீஸ் கமிஷனர் சரவாதி ராய்க்கு உத்தரவிட்டுள்ளார்.

எம்.குமரேசன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பொது இடங்களில் ‘மாதவிடாய் அறைகள்’… முதல்வருக்கு பூங்கோதை ஆலடி அருணா கோரிக்கை!

Paris Paralympics: அடுத்தடுத்து 4 பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா… மோடி வாழ்த்து!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment