பைங்கிளி : விமர்சனம்!

Published On:

| By uthay Padagalingam

sajin gopu painkili movie review

காதல் நாயகனாக ‘ஆவேஷம்’ அம்பான்!

சமீபகாலமாக மலையாளத் திரையுலகில் ஒரு சிறிய விஷயத்தை அல்லது ஒரு களத்தை எடுத்துக்கொண்டு, அதற்கேற்றாற்போலத் திரைக்கதையின் வழி ஒரு உலகத்தைக் கட்டமைத்து, வித்தியாசமான திரையனுபவங்களைத் தரும் வழக்கம் அதிகரித்து வருகிறது. அங்கு பெரிய வெற்றிகளைப் பெறாத திரைப்படங்களில் கூட இதனைக் காண முடிகிறது. அதனால், அவற்றில் நிறைந்திருக்கிற உழைப்பைக் கண்டு மகிழத் துடிப்பவர்களின் எண்ணிக்கை நாளும் அதிகரித்து வருகிறது. sajin gopu painkili movie review

அப்படியொரு சூழலில், ரசிகர்களைக் குதூகலிக்க வைக்கிற ‘மொமண்ட்’களை நிறைத்திருக்கும் என்ற நம்பிக்கையை உண்டாக்கியது ‘பைங்கிளி’ பட ட்ரெய்லர்.

ஆவேஷம் எனும் வெற்றிப்படத்தைத் தந்த இயக்குனர் ஜித்து மாதவன், அதன் நாயகன் பகத் பாசில் இணைந்து தயாரித்திருக்கிற படம் இது. ஆவேஷத்தில் அம்பான் எனும் பாத்திரத்தில் தோன்றி ரசிகர்களைக் குதூகலிக்கச் செய்த சஜின் கோபு ‘பைங்கிளி’யில் நாயகனாக நடித்திருக்கிறார். மலையாளத் திரையுலகின் இளம் தாரகை அனஸ்வரா ராஜன் நாயகியாக நடித்திருக்கிறார். ஜஸ்டின் வர்கீஸ் இசையமைத்திருக்கும் இப்படத்தில் நடிகர் ஸ்ரீஜித் பாபு இயக்குனராக அறிமுகம் ஆகியிருக்கிறார். sajin gopu painkili movie review

இப்படிப் பல வித்தியாசமான அம்சங்களைக் கொண்ட ‘பைங்கிளி’, பிப்ரவரி 14 அன்று காதலர் தினத் திரைப்படமாகத் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

எப்படிப்பட்ட அனுபவத்தைத் தருகிறது இந்த ‘பைங்கிளி’? sajin gopu painkili movie review

sajin gopu painkili movie review

எது காதல்? sajin gopu painkili movie review

பதினெட்டு வயது நிரம்பாத ஒரு இளம்பெண்ணுக்குத் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை அவசர அவசரமாக மேற்கொள்கின்றனர் அவரது குடும்பத்தினர். அதில், அப்பெண்ணுக்குக் கொஞ்சமும் விருப்பம் இல்லை. sajin gopu painkili movie review

அவர்களது பிடியில் இருந்து தப்பிக்க, வீட்டை விட்டு வெளியேறும் முடிவுக்கு வருகிறார் அப்பெண். பக்கத்து வீட்டில் வசிக்கும் பதின்ம வயதுச் சிறுமி தந்த ‘ஐடியா’ அது.

யாராவது ஒரு ஆணைக் காதலித்து, அவருடன் சேர்ந்து ‘உடன்போக்கு’ மேற்கொண்டால் சுதந்திரமாக வாழ முடியும் என்பது அவரது எண்ணம். ஆனால், அவரைச் சுற்றியலையும் ஆண்கள் எவரும் அதற்குத் தயாராக இல்லை.

வேறு வழியில்லாமல் ரவுடிகளைக் காதலிப்பது போல நடிக்கவும் தயாராகிறார் அந்தப் பெண். அப்போதும் பலன் கிடைப்பதில்லை.

இந்த நிலையில், தற்செயலாக நாயகனைச் சந்திக்கிறார். அவரது வீடு வரை செல்கிறார்.

இதற்கு முன்னர், அந்த நாயகனைப் பற்றித் தனியாகச் சொல்ல வேண்டும்.

ஊரார் என்ன சொல்வார்களோ என்று எல்லாவற்றுக்கும் தயங்கி நிற்கிற சுபாவம் கொண்டவர் அந்த நபர். வீட்டில் இருக்கும் தாய், தந்தை, பாட்டி, திருமணமாகிச் சென்ற சகோதரி, மருமகன் என்று அனைவரும் அவரை எள்ளி நகையாடுகின்றனர்.

ஒருநாள், அந்த நபர் ஒரு பொருளை வாங்க நண்பனுடன் புல்லட்டில் கோயம்புத்தூர் செல்கிறார். ஒரு லாட்ஜில் தங்குகிறார். sajin gopu painkili movie review

வந்த இடத்தில் ஒரு திருடன் புல்லட்டை திருட முற்பட, அவரைத் தாக்குகிறார். அவரது ஆட்கள் வந்துவிடுவார்களோ என்ற பயத்தில், சொல்லாமல் கொள்ளாமல் அந்த லாட்ஜில் இருந்து வெளியேறுகிறார். அப்போதுதான், அந்த திருடன் உயிரிழந்தது தெரிய வருகிறது.

’கொலை செய்துவிட்டோம்’ என்றுணர்ந்தபிறகு, அவருக்குள் இருக்கும் பயந்தாங்கொள்ளி வெளியே வருகிறான். sajin gopu painkili movie review

வேறு வழியில்லாமல், அந்த குற்றத்தில் இருந்து தன்னைக் காப்பதற்காகப் பைத்தியம் போன்று நடிக்க முயல்கிறார். அதற்கேற்றாற் போல, ஒரு மனநல மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவது போலப் பொய்யாகச் சான்றிதழ் பெற முயல்கிறார்.

அப்போது, அந்த நபரின் தாய் உட்பட ஊர்க்காரர்கள் சிலர் அங்கு வருகின்றனர். அதையடுத்து, ‘அவன் பைத்தியமாம்’ என்ற தகவல் ஊர் முழுக்கப் பரவுகிறது.

அதன்பிறகு, ஒரு நன்னாளில் நாயகியை நாயகன் நேரில் சந்திக்கிறார்.

ஊரார் பைத்தியம் என்றெண்ணும் ஒரு நபரின் வீட்டில் தங்குவது தனக்குப் பாதுகாப்பு தரும் என்று அப்பெண் தீர்மானிக்கிறார். ஆனால், அந்த ஆண் அதனை ஏற்பதாக இல்லை.

அப்பெண்ணை விரட்டுவதற்காக அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் தோல்வியடைகின்றன.

இந்த நிலையில், அப்பெண் மீது அவருக்குத் திடீரென்று காதல் பிறக்கிறது. அது, பக்கத்துவீட்டில் வசித்துவரும் பெண்ணுக்கு எரிச்சலை மூட்டுகிறது. காரணம், அவர் அந்த ஆணைத் தீவிரமாகக் காதலிப்பதே.

இந்த முக்கோணக் காதல் கதை எங்குபோய் முடியும்? அதற்கேற்ற சூழல் ஒன்று கதையில் முளைக்கிறது. sajin gopu painkili movie review

‘இதுநாள் வரை தான் செய்தது முட்டாள்தனம்’ என்று நாயகி உணர்கிறார். அப்போது, நாயகன் தனது காதலைத் தெரிவிக்கிறார்.

அதன்பின் என்ன நடக்கிறது என்பதோடு இப்படம் நிறைவுறுகிறது.

இந்தக் கதையில் சுகு எனும் பாத்திரத்தில் சஜின் கோபுவும், ஷீபா எனும் இளம்பெண்ணாக அனஸ்வராவும், பக்கத்துவீட்டுப் பெண் சுமாவாக ஜிஸ்மா விமலும் நடித்துள்ளனர்.

ஒரு சாதாரண காதல் கதையைக் கனமுள்ளதாக எண்ண வைப்பது இவர்களைப் போன்று இதில் இடம்பெற்றுள்ள நடிப்புக் கலைஞர்களின் பங்களிப்பு தான்.

sajin gopu painkili movie review

சிறப்பான நடிப்பு! sajin gopu painkili movie review

’ஆவேஷம்’ படத்தில் சஜின் கோபுவை ரசித்தவர்கள், இதில் அவரது நடிப்பைக் கொண்டாடுவது நிச்சயம். அதற்கேற்ற உழைப்பை இதில் அவர் கொட்டியிருக்கிறார். உண்மையைச் சொன்னால், இப்படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறார்.

சஜின் கோபுவுக்கு ஜித்துவும் பகத்தும் தந்திருக்கும் பரிசே இந்த ’நாயகன்’ வாய்ப்பு.

அனஸ்வரா ராஜன் பாத்திரம் முதல் பார்வையில் ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ ஜெனிலியாவின் இன்னொரு வெர்ஷனாக தெரியக்கூடும். ஆனால், ஒருகட்டத்தில் அந்த பாத்திரத்தை நாம் பார்க்கும்விதமே மாறிப்போகும் அளவுக்கு, அதன் தன்மையை உணர்ந்து நடித்திருக்கிறார்.

இவர்கள் இருவர் தவிர்த்து ஜிஸ்மா விமல், ரோஷன் ஷாநவாஸ், சந்து சலீம்குமார், லிஜோ ஜோஸ் பெலிசேரி, அபு சலீம், அவரது மனைவியாக, தாயாக நடித்தவர்கள் உட்படச் சிலர் இதில் முதன்மை பாத்திரங்களை ஏற்றிருக்கின்றனர். அவர்களது நடிப்பு, அக்காட்சிகளின் அழுத்தத்தை மேலும் அதிகப்படுத்துவதாக இருப்பது சிறப்பு.

தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜித்து மாதவன், இதன் எழுத்தாக்கத்தைக் கையாண்டிருக்கிறார். ’இயல்பு வாழ்வில் இப்படியெல்லாம் மனிதர்கள் இருப்பார்களா’ என்றென்ணுகிற வகையில் பாத்திரங்களை வடித்து, காட்சிகளை அமைத்திருக்கிறார்.

’கொலை செய்துவிட்டோம்’ என்ற பயத்தில் பிதற்றிக் கொண்டிருக்கிற சஜின் கோபு, அவரது நண்பர் ஷாநவாஸை நடைபாதை டீக்கடைக்காரர் ஒருவர் உணவுண்ண அழைக்கும் காட்சி ‘பிளாக் ஹ்யூமர்’ ரக நகைச்சுவை மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்.

இது போன்ற வித்தியாசமான காட்சியமைப்பே இப்படத்தின் பலம்.

ஒளிப்பதிவாளர் அர்ஜுன் சேது, கலை இயக்குனர் க்ரிபேஷ் ஐயப்பன்குட்டி, படத்தொகுப்பாளர் கிரண் தாஸ் மற்றும் ஆடை வடிவமைப்பு, ஒப்பனை, நடன வடிவமைப்பு, சண்டைக்காட்சி அமைப்பு, டிஐ, விஎஃப்எக்ஸ் நுட்பங்களில் பணியாற்றியவர்கள் என பலரது உழைப்பு இப்படத்தில் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது.

அவற்றில் ஒன்றாக அமைந்துள்ள ஜஸ்டின் வர்கீஸின் பின்னணி இசை, இப்படத்திற்கு இன்னொரு வண்ணத்தைப் பூசியிருக்கிறது.

sajin gopu painkili movie review

அவர் ஆக்கியுள்ள ‘ஹார்ட் அட்டாக்’, ’வாழ்க்கை என்பதே அன்பினில்’ பாடல்கள் நமக்கு வித்தியாசமான திரையனுபவத்தை நமக்குத் தருகின்றன.

இப்படத்தின் உள்ளடக்கத்தில் உள்ள ‘பிளாக் ஹ்யூமர்’ எனப்படும் இருண்மை நகைச்சுவையை மேலோங்கச் செய்ய உதவும் வகையில் பின்னணி இசை மற்றும் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

சிலருக்கு இந்த காட்சியாக்கமும் அதன் வழியே கிடைக்கும் அனுபவமும் ‘முரண்பட்டதாக’ தெரியலாம். அதுவே இப்படத்தின் மிகப்பெரிய குறை.

அதேநேரத்தில், எடுத்துக்கொண்ட கதைக்களத்தை, அதில் உலவும் பாத்திரங்களை வலுவாக உணரும் அளவுக்கு, இப்படத்தை ஆக்கியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீஜித் பாபு. சில இடங்களில் தென்படும் குறைகளை, சில விவரங்கள் விடுபட்டிருப்பதைச் சரி செய்திருந்தால், இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும் இப்படம்.

காதல் குறித்த உரையாடல்களில் ‘கிளிக்கு றெக்கை முளைச்சிடுச்சு, பறந்து போயிருச்சு’ ரக வார்த்தைகளை நாம் தினசரி வாழ்வில் கேட்டிருப்போம்.

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் ஒரு படத்தில் சொல்வது போல ‘காதல் ஒரு கழட்டிப்போட்ட செருப்பு, சைஸ் சரியா இருந்தா யார் வேணா மாட்டிக்கலாம்’ என்பது போன்றும் சிலர் விளக்கம் தரலாம்.

அது போன்ற சொல்லாடல்களைக் காட்சிப்படுத்தியது போன்று அமைந்திருக்கிறது ‘பைங்கிளி’.

சஜின் கோபு, அனஸ்வரா பாத்திரங்களின் வார்ப்பு, சமூகத்தின் ஒருபக்கத்தில் நிலவும் காதல்களை, அவற்றின் பின்னணியை வெளிக்காட்டுவதாக உள்ளன. காதல் ஒரு காவியம் என்றால், அதில் இது போன்று பல அத்தியாயங்கள் இருக்கும்.

அவற்றில் ஒன்றாக, சாதாரண மனிதர்களின் வாழ்வில் காதலுக்கு எத்தகைய இடம் உண்டு என்று சொன்ன வகையில் முக்கியத்துவம் பெறுகிறது இப்படம்.

பைங்கிளி’ ஒரு பெர்பெக்டான திரையனுபவத்தைத் தராது. அதேநேரத்தில், இதில் நிறைந்திருக்கும் உழைப்பு தமிழ் திரையுலகம் தந்து வருகிற திரையனுபவங்களைக் கேள்விக்குள்ளாக்குகிறது. அந்த வகையில் நமது படைப்பாளிகளும் ரசிகர்களும் ஒருசேரக் காணத்தக்கதாக உள்ளது.

முழுதாகக் கண்டுவிட்டு குறைகளை வாரியிறைப்பது உங்கள் விருப்பம். அப்படிக் காணும் அளவுக்கு மதிப்பான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது ‘பைங்கிளி’. அதைவிட வேறென்ன வேண்டும்?!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share