தளபதி 67 அப்டேட் : களமிறங்கும் பாலிவுட், மாலிவுட், டோலிவுட் நடிகர்கள்!

சினிமா

தளபதி 67 படத்தின் அதிரடி அப்டேட்களை 2வது நாளாக இன்று (ஜனவரி 31) வித்தியாசமான முறையில் வெளியிட்டுள்ளது செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம்.

மாஸ்டர் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் – விஜய்- லோகேஷ் தளபதி 67 படத்தினை தயாரிக்கிறது செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று வெளியிட்டது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, சண்டைப் பயிற்சியாளராக அன்பறிவ், படதொகுப்பாளராக ஃபிலோமின் ராஜ், கலை இயக்குநராக சதீஷ் குமார், நடன இயக்குநராக தினேஷ் மாஸ்டர், வசனங்களை லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், தீரஜ் வைத்தி ஆகியோர் சேர்ந்து எழுதுகின்றனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று படத்தில் நடிக்க உள்ள பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகளின் பட்டியலை அவர்கள் தெரிவித்த மகிழ்ச்சியான செய்தியுடன் அதிகாரப்பூர்வமாக இன்று தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சரியாக மதியம் 3மணி முதல் ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒருவர் என அதிகாரப்பூர்வ நடிகர்களின் பட்டியலை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டது.

அதன்படி, தளபதி 67 திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், இயக்குநர் மிஸ்கின், மன்சூர் அலிகான், கேரள இளம் நடிகர் மேத்யூ தாமஸ், இயக்குநரும் நடிகருமான கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

அனைவரும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் மற்றும் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்ற வெற்றி கூட்டணியுடன் இணைவது குறித்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

படக்குழுவினர் அனைவரும் தனி விமானத்தில் இன்று காஷ்மீர் சென்றுள்ள நிலையில், நாளை படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

மேலும் நாளை முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு தளபதி 67 அறிமுக வீடியோ உள்ளிட்ட அதிரடியான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

”என் பேச்சை வெட்டி, ஒட்டி அவதூறு பரப்புகின்றனர்” : ஈவிகேஎஸ் இளங்கோவன்

சிறுமி வன்கொடுமை: பிரபல சாமியாருக்கு ஆயுள் தண்டனை!

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *