ஏ.ஆர். ரஹ்மானுக்கும் மோகினி தேவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று சாயிரா பானுவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது மனைவி சாயிரா பானுவை பிரிந்துள்ளார். இசை மீது அதிக காதல் கொண்ட ஏ.ஆர்.ரகுமான் குடும்பத்துடன் நேரம் செலவழிக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவருடைய மனைவி இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார் என கூறுகின்றனர். ஆனால், 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை அவ்வளவு எளிதில் முடிந்து விடாது. விரைவில் இவர்கள் இணைவார்கள் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் இருக்கின்றனர்.
இது ஒரு புறம் இருக்க இந்த விவாகரத்து அறிவிப்பு வந்த கையோடு மற்றோரு செய்தியும் பரவியது. அதாவது ஏ.ஆர்.ரகுமானிடம் கிட்டாரிஸ்ட் ஆக பணிபுரிந்து வரும் மோஹினி தே தனது கணவரை பிரிய போவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து, இவர்கள் இருவருக்கும் தொடர்பு இருப்பதாக யூடியூப்பில் பல வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், சாயிரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ராய் ஆங்கில சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘மோகினி தே தன் கணவரை விவாகரத்து செய்ததற்கும் ஏ.ஆர். ரஹ்மான் தம்பதி பிரிவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இருவரும் மிகுந்த முதிர்ச்சியுடன் இந்த விஷயத்தை அணுகியுள்ளனர்.
ஒவ்வொரு திருமணத்திலும் ஏற்ற இறக்கங்கள் உண்டு. தொடர்ந்து, இருவரும் ஒருவருக்கு ஒருவர் சப்போர்ட்டாக இருப்பார்கள். இதுவரை , விவாகரத்துக்காக எவ்வளவு பணம் சாயிரா பானுவுக்கு கொடுக்கப்படும் என்கிற விவரங்கள் குறித்து இன்னும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ரூ.1,750 கோடி முதல் ரூ.2,000 கோடி வரை சொத்து இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால், அவரின் மனைவி இதுவரை ஜீவனாம்சம் பற்றி எதுவும் பேசவில்லை என கூறப்படுகிறது. ஒரு வேளை கேட்டால், தனது சொத்தில் பாதியை ஏ.ஆர். ரஹ்மான் கொடுக்க வேண்டியது வரலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
சிபிஐ விசாரணை : எடப்பாடிக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்!
கிரிக்கெட்டில் நடுவருக்கும் ஹெல்மட் கொடுங்கப்பா… பாவம் எப்படி வீங்கிருக்குது பாருங்க!